Cook With Comali: வைல்ட் கார்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2 பிரபலங்கள்!

Cook With Comali: வைல்ட் கார்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2 பிரபலங்கள்!

குக் வித் கோமாளி டீம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன 2 பேர் வைல்ட் கார்டு ரவுண்டில் இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறார்கள்.

  • Share this:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேட் ஆன 2 பேர் வைல்ட் கார்டு ரவுண்டில் இறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறார்கள்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களின் ஃபேவரிட்டாக மாறியுள்ளது. நகைச்சுவை சமையல் என இரண்டையும் மையப்படுத்திய இந்நிகழ்ச்சி, விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மற்றவர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.

cook With Comali wildcard Round shakeela pavithra lakshmi qualifies for the finals
குக் வித் கோமாளி


Cook With Comali: ’குக் வித் கோமாளி’யில் வைல்ட் கார்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரபலம்?

இந்நிலையில் அவர்கள் அனைவரும் வைல்ட் கார்டு எண்ட்ரியில் மீண்டும் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்துள்ளனர். இதில் ஒருவர் இறுதிப் போட்டிக்கு செல்வார் என்று கூறப்பட்டது. அதன்படி வைல்ட் கார்டு ரவுண்டை வென்று நடிகை ஷகீலா இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றிருக்கும் செய்தியையும் முன்பே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இருக்கிறது.

அது என்னவென்றால், ஷகீலா மட்டுமல்ல இன்னொருவரும் வைல்ட் கார்டு ரவுண்டில் தகுதிப் பெற்றிருக்கிறார் என்பது தான். அவர் வேறு யாருமல்ல, பவித்ரா லட்சுமி தான்! அதன் படி அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லட்சுமி ஆகிய 5 பேரும் தற்போது இறுதிப் போட்டியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: