Cook With Comali: 'குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டில் எண்ட்ரியான ஃபேவரிட் நட்சத்திரங்கள்!

Cook With Comali: 'குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டில் எண்ட்ரியான ஃபேவரிட் நட்சத்திரங்கள்!

குக் வித் கோமாளி

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டு எண்ட்ரியில் ரசிகர்களின் ஃபேவரிட் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ வைல்ட் கார்டு எண்ட்ரியில் ரசிகர்களின் ஃபேவரிட் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

    தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. நகைச்சுவையை மையமாக வைத்த சமையல் போட்டி நிகழ்ச்சியான இது, விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

    விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பு தளத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் – கவனம் பெறும் புகைப்படம்!

    ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.



    இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மற்றவர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் வைல்ட் கார்டு எண்ட்ரியில் மீண்டும் வந்துள்ளனர். தர்ஷா குப்தா, ரித்திகா, பவித்ரா லட்சுமி, ஷகிலா, தீபா சங்கர், மதுரை முத்து ஆகியோர் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.

    தங்களது ஃபேவரிட் நட்சத்திரங்களை மீண்டும் குக் வித் கோமாளி செட்டில் பார்ப்பதில் மகிழ்ச்சியடைந்திருக்கும் ரசிகர்கள், வின்னர் யார் என்பதை தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: