Home /News /entertainment /

COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு!

COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தர்ஷன், ஸ்ருதிகா, அம்மு அபிராமி, வித்யுலேகா ஆகியோர் உள்ளனர்.

    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், ஆஹா கல்யாணம் புகழ் பவி டீச்சர் ஆகிய இருவரும் வருகை தருகின்றனர்.

    6 வயது முதல் 60 வயது வரை என அனைத்து வயதினரும் விரும்பி பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி ஷோ. முதல் 2 சீசன்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதன் பின்பு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி 3 மிகப் பெரிய சாதனையை செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெள்ளித்திரை நட்சத்திரங்களும் இந்த ஷோவில் தோன்றி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகின்றனர்.

    ரசிகர்களின் கோரிக்கையை மதித்த நடிகர்.. ரோஜா அர்ஜூன் சொன்ன குட் நியூஸ்!

    நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி துல்கர், அதிதீ, பிருந்தா மாஸ்டர், ஆர்.ஜே பாலாஜி என வெள்ளித்திரை நட்சத்திரங்கள் தங்களின் பட புரமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து வருகின்றனர். பிரபலங்கள்  கொஞ்சம் நேரம் போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்களுடன் கலந்துரையாடி விட்டு வயிறு குலங்க சிரித்தப்படியே அங்கிருந்து கிளம்புவார்கள். அந்த வகையில் இந்த வாரம் தமிழ் சினிமாவின் ப்ரைடாக பார்க்கப்படும் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் ஒரே ஷார்டில் எடுக்கப்பட்ட ’இரவின் நிழல்’ படத்தின் புரமோஷனுக்காக குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கிறார்.



    அவருடன் சோஷியல் மீடியா வைரல் ஆஹா கல்யாணம் புகழ் பவி டீச்சரும் வருகிறார். வழக்கம் போல் அவரையும் தனது காமெடியால் இம்ப்ரஸ் செய்கிறார் பாலா. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    என்ட்ரி கொடுத்த உடனே பார்த்திபன்  தனது காமெடி கவுண்டர்களை அள்ளி விடுகிறார். தர்ஷனை கலாய்ப்பது, பாலாவை சீண்டுவது என பார்த்திபனின் ஆட்டம் இங்கேயும் தொடர்கிறது. புரமோவை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தர்ஷன், ஸ்ருதிகா, அம்மு அபிராமி, வித்யுலேகா ஆகியோர் உள்ளனர். இன்னும் வைல்டு கார்டு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ரசிகர்கள் அதற்காக ஆவலாக வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Parthiban, Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி