சிறு விபத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஜய் டிவி மணிமேகலை 4 வாரங்களுக்குப் பிறகு நடனம் ஆடியதாக, இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
சன் மியூஸிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஹூசைன் என்ற நடன இயக்குநரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சன் குழுமத்திலிருந்து விஜய் டிவிக்கு மாறினார்.
மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவதாக மணிமேகலை சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் இதை படித்தேன். நன்றாக இருந்தது. நான் ஒரு சிறு விபத்தை சந்தித்தேன். இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் 2 வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாது. எல்லோரும் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக சுடு தண்ணீர் தூக்கும் போது கவனமாக இருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் குறிப்பிட்டது போலவே குக் வித் கோமாளியின் கடந்த சில எபிசோட்களில் மணிமேகலை கலந்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது கணவர் ஹுசைனுடன் ‘வலிமாங்கா வலிப்’ பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் மணிமேகலை. அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், ”சுடு தண்ணீர் விபத்தால் 4 வார பெட் ரெஸ்ட்டுக்குப் பிறகு, ஹுசைன் என்னை ஆட வைக்க முயற்சிக்கும் போது... வெகுநாட்கள் கழித்து டிரைவிங்... நீ என்னுடைய மிகச் சிறந்த பிளெஸ்ஸிங்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மணிமேகலையின் உடல்நிலை சரியாகியுள்ளதையடுத்து இனிவரும் குக் வித் கோமாளி எபிசோட்களில் அவரை பார்க்க முடியும் எனத் தோன்றுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்