• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய வெங்கடேஷ் பட் - ரசிகர்கள் வாழ்த்து!

மகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய வெங்கடேஷ் பட் - ரசிகர்கள் வாழ்த்து!

வெங்கடேஷ் பட்

வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளியில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் வித்தியாசமான கெட்டப் கொடுத்து கோமாளிகளை களத்தில் இறக்கினர்.

  • Share this:
    குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், தனது செல்ல மகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ 2 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இரண்டு சீசன்களுமே மெகா ஹிட் அடித்தன. காமெடிக்கு பஞ்சமே இல்லை. இரண்டு சீசன்களிலும் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா உள்ளிட்டோர் பங்கேற்றறனர். ஒவ்வொருவரும் காமெடியில் தனி டிராக் போட்டு தங்களது பெஸ்டைக் கொடுத்தனர்.

    போட்டியாளர்களாக பங்கேற்றவர்களும் கோமாளிகளுடன் இணைந்து சமையல் செய்து கொண்டே காமெடி, கவுண்டர்களில் கலக்கியதால் ஷோ வேறலெவலுக்கு சென்றது. நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் கோமாளிகளுடன் களத்தில் இறங்கி விளையாடினர். வித்தியாசமான டிஷ் செய்வதைக் காட்டிலும், அவர்கள் செய்த காமெடி மக்களை வெகுவாக ஈர்த்தது.

    ஒவ்வொரு ரவுண்டுக்கும் வித்தியாசமான கெட்டப் கொடுத்து கோமாளிகளை களத்தில் இறக்கினர். அவர்களும் அந்த கெட்டபுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுத்தனர். இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் தேடி வந்தன.

    போட்டியாளராக இருந்த அஸ்வின், அண்மையில் வெளியான ஓ மணப்பெண்ணே படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் ரோலில் நடித்தனர். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கோமாளியாக இருந்த புகழ் இப்போது பிஸி ஷெட்யூலில் இருக்கிறார். நிறைய திரைப்படங்களைக் கைவசம் வைத்துக் கொண்டு, சூட்டிங்கில் பிஸியாக பங்கேற்று வருகிறார்.

    இதனால், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கூட அவரைப் பார்க்க முடியவில்லை. இதேபோல், ஷிவாங்கியும் பல்வேறு புதிய படங்களில் பாடல் பாடும் வாய்ப்பை பெற்று பாடி வருகிறார். தங்கதுரை மற்றும் பாலாவும் புதிய படங்களில் நடித்து வருகின்றனர். தங்கதுரை நடித்த சர்பாட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் வெளியாகி, அவருக்கு நல்லப் பெயரை பெற்றுக் கொடுத்தது.

    போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் வாய்ப்புகள் குவியவில்லை. நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோருக்கும் பட வாய்ப்புகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சின்னத்திரையில் பிரபலமாக மாறியுள்ள குக் வித் கோமாளி ஷோ போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள், எங்கு சென்றாலும் செய்தியாக மாறிவிடுகிறது.

    அண்மையில் வெங்கடேஷ் பட்டின் செல்ல மகள் ராதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மகளின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய அவர், குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.




    இதனைப் பார்த்த ரசிகர்கள் வெங்கடேஷ் பட்டின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், குக் வித் கோமாளி ஷோ எப்போது வருகிறது? என்ற அப்டேட்டையும் அவரிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: