குக் வித் கோமாளி சீசன் 3ல் நாளைய எபிசோடில் சிறப்பு விருந்தினர்களாக குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளர்கள் வருகிறார்கள் . இந்த விஷயம் ஏற்கெனவே புரமோ மூலம் தெரிய வந்தது. இந்நிலையில் சீசன் 3 போட்டியாளர்கள், கோமாளிகள், சீசன் 2 போட்டியாளர்கள் சேர்ந்து செட்டில் அடித்த லூட்டி வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வகையில் பாக்கியலட்சுமி புகழ் ரித்திகா தனது இன்ஸ்டாவில் குக் வித் கோமாளி செட்டில் கோமாளிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் ஷாக் ஆகியுள்ளனர். காரணம், அமைதி புயல் ரித்திக்கா பாலா, புகழ், சரத், தங்கத்துரையுடன் சேர்ந்து மரண குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.
இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. விஜய்டிவி மாகாபாவின் சொத்து இத்தனை கோடியா?
ராஜா ராணி சீரியல் முதல் சீசன் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி ஆனவர் ரித்திகா. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற ரோலில் நடித்து வருகிறார். மற்ற சீரியல்களை காட்டிலும் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகாவுக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது. இதற்கு நடுவில் கடந்த வருடம் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இவருடன் அதிகமாக ஜோடி சேர்ந்தது பாலா தான். அதனாலேயே பாலாவையும் ரித்திகாவையும் மற்ற போட்டியாளர்கள், கோமாளிகள் பயங்கரமாக கலாய்ப்பார்கள்.
வெண்பாவை பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்ன பாரதி! கைத்தட்டிய குடும்பம்
பாலா ரித்திக்காவுக்கு பாடல் எல்லாம் எழுதி டெடிகேட் செய்தார். அதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டனர். இதனால் இருவருக்கும் காதல் என வதந்திகள் பரவ, நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என ரித்திகா விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இந்த வார குக் வித் கோமாளி எபிசோடில் சீசன் 2 போட்டியாளர்கள் கனி, பவித்ரா, ஷகீலா, தீபா அக்கா, ரித்திகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகின்றனர் காரணம் இந்த வாரம் செலபிரேஷன் ரவுண்ட்.
அப்படி இருக்கையில் செட்டில் ரித்திகா பாலா, புகழுடன் சேர்ந்து மரண குத்து டான்ஸ் போட்டுள்ளார். ஆரம்பத்தில் அவருடன் சேர்ந்து அம்மு அபிராமி, வித்யுலேகாவும் ஆடுகின்றனர். ஒரு கட்டத்திற்கு பிறகு மூச்சு வாங்க அம்மு அபிராமி பாதியில் கிளம்பி விடுகிறார். ஆனால் ரித்திகா நிறுத்தவில்லை விடாமல் இறங்கி குத்துகிறார். இந்த வீடியோவை செம்ம ஹாப்பியாக ரித்திகா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவா இது? செம்ம க்யூட் எப்பவும் இப்படியே ஜாலியா இருங்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.