Home /News /entertainment /

Cook With Comali : இனி புகழை கோமாளியாக பார்க்க முடியாது... இதுதான் காரணம்!

Cook With Comali : இனி புகழை கோமாளியாக பார்க்க முடியாது... இதுதான் காரணம்!

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

Cook With Comali today : புகழ் ஹீரோ ஆகிவிட்டார். இன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் இதுக் குறித்த அறிவிப்பை சொல்வார்.

  ரசிகர்களின் பேராதரவுடன் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இருப்பவர் நடிகர் புகழ். இவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல் ஒன்று இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. என்னது அது? வாங்க பார்க்கலாம்.

  குக்கிங் உடன் காமெடி என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட குக் வித் கோமாளி ஷோ ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் ரியாலிட்டி ஷோ லிஸ்டில் இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமை இரவு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியை இளைஞர்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். அதற்கு காரணமே, இதில் குக்குகளுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டைகள் தான். தற்போது ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 3ல் சின்னத்திரையில் மட்டுமில்லை வெள்ளித்திரையிலும் கலக்கும், கலக்கி கொண்டிருக்கும் நடிகர், நடிகைகளும் போட்டியாளராக வந்துள்ளனனர்.

  வாடிவாசல் டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்ட சூர்யா

  ரோஷினி, மனோபாலா, வித்யுலேகா, சூர்யாவின் ஸ்ரீ, ஆல்பம் பட ஹீரோயின் ஸ்ருதிகா அர்ஜூன், கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, அம்மு அபிராமி என நீண்ட லிஸ்டில் தற்போது வரை 2 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த சீசனில் புகழ் இல்லை என கூறப்பட்டது. அதற்கு பதிலாக சூப்பர் சிங்கர் பரத், மூக்குத்தி முருகன், குரேஷி ஆகியோர் புதிய கோமாளிகளாக களம் இறக்கப்பட்டனர். ஆனாலும் புகழ் ரசிககர்கள் அவரை கேட்டுக் கொண்டே இருந்தனர். படங்களில் பிஸியாக இருப்பதால் புகழை இந்த சீசனில் பார்க்க முடியவில்லை என கூறப்பட்டது.

  விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

  ஆனால் அடுத்த 2 வது வாரமே புகழ் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்தார். ஷூட்டிங் இல்லாத நேரம் கட்டாயம் இந்த நிகழ்ச்சிக்கு வருவேன் உங்களை மகிழ்விப்பேன் என்றார். அதன்படி முடிந்த வரை குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டு வருகிறார். ஆனால் இனிமே அது நடக்குமா? என்றால் சந்தேகம் தான்.

  காரணம், புகழ் தற்போது ஹீரோ ஆகிவிட்டார். இன்று ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் இதுக் குறித்த அறிவிப்பை சொல்வார். தனது குக் வித் கோமாளி குழுவினருடன் சேர்ந்து ஹீரோவாகும் முதல் படம் குறித்த அறிவிப்பை புகழ் வெளியிட உள்ளார். இந்த படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் புகழ் தெரிவித்துள்ளார்.

  புகழுக்கு ஜோடியாக ’டிக்கிலோனா’ படத்தில் நடித்தவர் ஷெரின் காஞ்ச்வாலா நடிக்க இருப்பதாகவும் மாதவன் நடித்த ’என்னவளே’ திரைப்படத்தை இயக்கிய ஜெ.சுரேஷ், புகழின் முதல் படத்தை இயக்க இருப்பதாக சந்தோஷத்துடன் புகழ் ஷேர் செய்துள்ளார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

  புகழ், இந்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகி விட்டால் குக் வித் கோமாளி செட்டில் இனி பார்ப்பது கஷ்டம் என்பதால் குக் வித் கோமாளி புகழ் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Cook With Comali Season 2, Vijay tv

  அடுத்த செய்தி