Sivaangi: ’இன்னைக்கு தான் கடைசி நாள்’ குக் வித் கோமாளி சிவாங்கி எமோஷனல்

Sivaangi: ’இன்னைக்கு தான் கடைசி நாள்’ குக் வித் கோமாளி சிவாங்கி எமோஷனல்

சிவாங்கி

தன் கல்லூரியின் கடைசி நாளை உணர்வுப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டிருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி.

  • Share this:
    தன் கல்லூரியின் கடைசி நாளை உணர்வுப்பூர்வமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டிருக்கிறார் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி.

    விஜய் டிவி-யின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 2-ம் சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் வெற்றியாளராக கனியும், முதல் ரன்னராக ஷகீலாவும், இரண்டாவது ரன்னராக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் கலந்துக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கின்றன. முக்கியமாக சிவாங்கி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மிகவும் பிடித்த கோமாளிகளில் ஒருவராக இருந்தார். அவருடைய அப்பாவித்தனமும் க்யூட்னெஸூம், மற்றவர்களிடமிருந்து சிவாங்கியை வேறுபடுத்தி காட்டியது. நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்ட சிம்பு கூட, உண்மையானவராக இருந்ததற்காக சிவாங்கியை பாராட்டினார்.

    இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எமோஷனலான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஒரு விண்ணப்பத்தின் படத்தைப் பகிர்ந்த சிவாங்கி, இன்று ஏப்ரல் 24, தனது இளங்கலை பட்டப்படிப்பின் கடைசி நாள் என்று தெரிவித்திருக்கிறார். இது கொஞ்சம் எமோஷனலாக மாறியிருக்கிறது. இதையடுத்து சிவாங்கியின் வெற்றிகரமான பயணத்தைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர்!

    தவிர சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் சிவாங்கி, அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: