தஞ்சாவூரில் குக் வித் கோமாளி சிவாங்கி - வரவேற்பைப் பெறும் வீடியோ!

சிவாங்கி

தனது யூ-ட்யூப் சேனலில் தஞ்சாவூர் பாரம்பரிய வீடு பற்றிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் சிவாங்கி.

 • Share this:
  குக் வித் கோமாளி சிவாங்கியின் சமீபத்திய வீடியோ ஒன்று 1 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  விஜய் டிவி-யில் ஓளிபரப்பான நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ மிகவும் பிரபலமானது. இதில் கோமாளிகள் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வாய் விட்டு சிரிக்க வைக்கும். புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி என கோமாளிகளும், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்கியதில் சிவாங்கிக்கு அதிக பங்குண்டு. ’அஸ்வினே’ என கூப்பிடும் அந்த டோன், புகழ் மற்றும் பாலாவுடன் இணைந்து அண்ணன் தங்கையாக செய்யும் ரகளை என ரசிகர்களுக்கு நிறைய பொழுது போக்கு அம்சங்களை வாரி வழங்கினார் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் அறிமுகமான இவருக்கு, அதை விட பெரும் பேரையும் புகழையும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பெற்றுத் தந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தனது யூ-ட்யூப் சேனலில் தஞ்சாவூர் பாரம்பரிய வீடு பற்றிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் சிவாங்கி. “இதுபோன்ற வீடு சென்னையில் எங்கேயும் பார்க்கவே முடியாது. கண்டிப்பாக இது வித்தியாசமாக இருக்கும். இந்த வீடெல்லாம் பள்ளி படிக்கும் காலத்தில் சுற்றுலாவின்போது, இதுதான் பாரம்பரியமான வீடு என்று ஆசிரியர்கள் கூறுவார்கள். அப்போது பேருந்தில் போகிற போக்கில் பார்த்ததுதான். அதற்கு அப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன்” என்று கூறிய சிவாங்கி வீட்டின் நுழைவாயில் முதல், மொட்டைமாடி வரை அனைத்தையும் சுற்றிக் காட்டுக்கிறார்.  இந்த வீடியோ யூ-ட்யூபில் தற்போது 9.4 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, 1 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: