Sivaangi: சிவாங்கியா இது? லைக்ஸை குவிக்கும் குடும்பப் படம்!

Sivaangi: சிவாங்கியா இது? லைக்ஸை குவிக்கும் குடும்பப் படம்!

குடும்பத்துடன் சிவாங்கி

’அஸ்வினே’ என கூப்பிடும் அந்த டோன், புகழ் மற்றும் பாலாவுடன் இணைந்து அண்ணன் தங்கையாக செய்யும் ரகளை என சிவாங்கியை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

  • Share this:
    சிறுவயதில் எடுத்துக் கொண்ட சிவாங்கியின் குடும்பப் படம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.

    விஜய் டிவி-யில் ஓளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ மிகவும் பிரபலமானது. இதில் கோமாளிகள் செய்யும் ரகளைகள் ரசிகர்களை வாய் விட்டு சிரிக்க வைக்கும். புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி என கோமாளிகளும், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, பவித்ரா எலிமினேட் ஆன நிலையில் மற்றவர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.

    Sivaangi's Childhood Picture with her family
    குடும்பத்துடன் சிவாங்கி


    Valimai: ‘வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் நிச்சயம்’ – வானதி சீனிவாசன்!

    குறிப்பாக இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்குவதில் சிவாங்கிக்கு அதிக பங்குண்டு. ’அஸ்வினே’ என கூப்பிடும் அந்த டோன், புகழ் மற்றும் பாலாவுடன் இணைந்து அண்ணன் தங்கையாக செய்யும் ரகளை என சிவாங்கியை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

    சூப்பர் சிங்கரில் அறிமுகமான இவருக்கு, அதை விட பெரும் பேரையும் புகழையும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் தற்போது சின்ன வயதில் தனது குடும்பத்தினருடன் சிவாங்கி எடுத்துக் கொண்ட படம் தற்போது இன்ஸ்டாகிராமில் கவனம் பெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    சிறந்த கதைகள்