Home /News /entertainment /

சிவாங்கியை பங்கமாக கலாய்த்த மணிமேகலை! - ஷூட்டிங்கில் அலப்பறை!

சிவாங்கியை பங்கமாக கலாய்த்த மணிமேகலை! - ஷூட்டிங்கில் அலப்பறை!

மணிமேகலை, சிவாங்கி

மணிமேகலை, சிவாங்கி

திரைப்பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சிவாங்கி, தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு கம் பேக் கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 பரோமோ ஷூட் நடைபெற்றது. ஷூட் முடிந்தவுடன் மணிமேகலையும் சிவாங்கியும் இணைந்து செம்மயாக ஃபன் செய்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...

தமிழ் சின்னத்திரையின் பெஸ்ட் காமெடி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் தொடங்கவுள்ளது.


இனி சமூக வலைத்தளங்களில் விஜய் டிவியின் க்யூட் கோமாளிகள் பற்றி அப்டேட்ஸ் வரிசைக்கட்டி நிற்கும். அதன் அறிகுறியாக இன்று சிவாங்கி மற்றும் மணிமேகலையின் டிரைவிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


குக் வித் கோமாளி சீசன் நிறைவடைந்தவுடன் சிவாங்கி-க்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. டான் படத்தில்  சிவகார்த்திகேயன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பிறகு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை குறைத்துக் கொண்டார்.


திரைப்பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவர், தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு கம் பேக் கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 புரோமோ ஷூட் நடைபெற்றது.




Sivaangi
சிவாங்கி


ஷூட் முடிந்த கையோடு சிவாங்கிக்கு மணிமேகலை டிரைவிங் கிளாஸ் எடுத்திருக்கிறார். அதனை தன் யூ டியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார் சிவாங்கி. பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் வியூஸ். பொதுவாக சிவாங்கி பதிவிடும் வீடியோக்கள் பெரும்பாலும் யூ டியூப் டிரெண்டிங்கில் வந்துவிடும். இந்த டிரைவிங் வீடியோவும் டிரெண்டிங்கில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  

ஹுசைன் மணிமேகலை
ஹுசைன் மணிமேகலை

கடந்த ஆண்டு அடுத்தடுத்து இரண்டு கார்கள் வாங்கி ரசிகர்களுக்கு  ஷாக் கொடுத்தார் மணிமேகலை. ஹுசைன் மணிமேகலை யூடியூப் சேனலுக்கு கிடைத்த வரவேற்பு, அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தியது. அதன் விளைவாக தன் கனவு காரான BMW சொகுசு காரை வாங்கினார். மணிமேகலை  சமையலில் சொதப்பினாலும்  டிரைவிங்கில் கில்லி. எனவே நீண்ட நாட்களாக கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த சிவாங்கி-க்கு தானே டிரைவிங் கற்றுக் கொடுத்திருக்கிறார் மணி.






 




View this post on Instagram





 

A post shared by Mani Megalai (@iammanimegalai)






காரின் பிரேக்கில் இருந்து காலை எப்படி எடுக்கணும் என்று சிவாங்கி கேட்ட கேள்விக்கு, "ஒரு பூ பூக்குற மாதிரி மெதுவா பிரேக்கில் இருந்து கால எடுக்கணும்’’ என்று தன் பாணியில் விளக்கம் கொடுக்கிறார். சிவாங்கி சீக்கிரமே BMW கார் வாங்கப் போவதாகவும் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார். "மேடம் BMW கார்ல தான் டிரைவிங் கத்துப்பீங்களோ’’ என்று மணிமேகலை சொன்ன ஃபைனல் பன்ச் செம!  



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Aswini S
First published:

Tags: TV show, Vijay tv

அடுத்த செய்தி