குக் வித் கோமாளி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற 2 பேர்... எலிமினேட் ஆனது யார்?

குக் வித் கோமாளி டீம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறங்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா 3 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, தீபா சங்கர், மதுரை முத்து ஆகியோரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றும் இன்றும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் இருவர் மற்றும் வெளியேறப்போகும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி இறுதிச்சுற்றுக்குச் செல்லும் முதல்நபராக கனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அஸ்வினும் தேர்வாகியுள்ளார். இருவருக்கும் சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பாபா பாஸ்கர் ,மற்றும் ஷகிலா இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என்ற நிலையில் இருவருக்கும் இடையேயான போட்டியில் பாபா பாஸ்கர் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு செல்லும் தகுதி பெற்றார். அதைத்தொடர்ந்து ஷகிலா வெளியேறினார்.

அடுத்தவாரம் நடைபெற இருக்கும் வைல்ட் கார்ட் சுற்றில் இதுவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் கலந்து கொள்வார்கள். அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: