ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சர்ப்பிரைஸ்!

cook with comali : ரசிகர்கள், போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சர்ப்பிரைஸ்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

cook with comali saturday : இந்த வாரம் கோமாளிகளுக்கு என்ன கெட்டப் என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடு களைக்கட்ட போவது புரமோ மூலம் உறுதியாகியுள்ளது. காரணம், இந்த வாரம் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள், கோமாளிகளுடன் ஒரு சிறப்பு விருந்தினரும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல், டான்ஸ், பாட்டு, காமெடி,கேம் ஷோ என மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஓரங்கட்டியுள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவை சேர்த்து வெளியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதிலும் மற்ற 2 சீசன்களை விடவும் தற்போது ஒளிப்பரப்பாகும் 3வது சீசனுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு எந்த வயசுல திருமணம் நடந்தது தெரியுமா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிப்பரப்பை தொடங்கிய குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில்  போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர், அவர்களுடன் 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக போன வாரம் உள்ளே வந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான். அதை மேலும் அதிகரிக்கும் வகையில் வாராவாரம் கோமாளிகளுக்கு விதவிதமான கெட்டப்புகளை கொடுத்து குக் வித் கோமாளி குழு கான்செப்டில் டஃப் கொடுத்து வருகின்றனர்.

' isDesktop="true" id="744399" youtubeid="LWviAX7m0hE" category="television">

இந்நிலையில், இந்த வாரம் கோமாளிகளுக்கு என்ன கெட்டப் என தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதற்குள் மற்றொரு சர்ப்பிரைஸ் தகவல் கிடைத்துள்ளது. இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வருகிறார். அவரின் ’டான்’ திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் படம் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பல தகவல்களை பகிர்ந்து கொள்வார் என தெரிகிறது.

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம்..கெரியரில் ஜெயித்து கார் வாங்கிய விஜய் டிவி நாஞ்சில் விஜயன்!

ஏற்கெனவே, இந்த நிகழ்ச்சிக்கு சிம்பு, துல்கர் என பெரிய நட்சத்திரங்கள் அனைவருமே சிறப்பு விருந்தினர்களாக வந்து சென்றுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவியின் செல்ல பிள்ளையான நடிகர் சிவகார்த்திகேயன் வருகிறார். இந்த வார எபிசோட் வேறலெவலுக்கு கலகலப்பாக இருக்க போகிறது.  அதுமட்டுமில்லை குரேஷி, சிவா  போல மிமிக்ரி செய்து காட்டியும் அசத்துகிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Cook With Comali Season 2, Sivakarthikeyan, Vijay tv