முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / cook with comali: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குக் வித் கோமாளி சந்தோஷ் - சுனிதா!

cook with comali: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குக் வித் கோமாளி சந்தோஷ் - சுனிதா!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

cook with comali santhosh sunitha : ரசிகர்களின் ஃபேவரெட் ஜோடியான சந்தோஷ் - சுனிதா இருவரும் சேர்ந்து விரைவில் நடிக்கவுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குக் வித் கோமாளி ரசிகர்கள் மட்டுமில்லை, குக் வித் கோமாளி சீசன் 2, சீசன் 3 போட்டியாளர்களே இந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். அது என்ன வீடியோ தெரியுமா?

குக் வித் கோமாளி சீசன் 3 வெற்றிக்கரமாக முடிவடைந்தாலும் இதுக் குறித்த பேச்சுகள் முடிந்தபாடில்லை. எந்த பக்கம் திரும்பினாலும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள், கோமாளிகள் குறித்த பேச்சுகள், அவர்களின் பேட்டிகள் என வைரல் லிஸ்ட் தான். மற்ற 2 சீசன்களில் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு நெருக்கமானர்கள். ஆனால் இந்த 3 வது சீசனில் போட்டியாளர்களே ஒருவருக்கு ஒருவர் பயங்கர க்ளோஸ் ஃபிரண்ட்ஸாக மாறி விட்டார்கள். ஒன்றாக கோயில், பிக்னிக், கெட் டூ கெதர், டின்னர், பார்ட்டி என சொந்த குடும்பம் போல் சேர்ந்து விட்டார்கள்.

விஜய் டிவியில் நடிகை ஸ்ரீப்ரியா.. பல வருட ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்!

அந்த வகையில் குக் வித் கோமாளி 3 டெலிகாஸ்ட்  ஆன போதே சுனிதா - சந்தோஷ் குறித்த காதல் பேச்சுகள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. ஆனால் இதற்கு சந்தோஷ் அப்போதே விளக்கம் அளித்து இருந்தார். சுனிதா எனக்கு தோழி மட்டுமே என கூறி இருந்தார். அதே நேரம் சந்தோஷ் எலிமினேட் ஆன அன்று சுனிதா தேம்பி தேம்பி அழுதார். இப்படி இருக்கையில் சுனிதா - சந்தோஷ் இருவரின் கெமிஸ்ட்ரிக்கு தனியாக ஃபேன்ஸ் கூட்டம் உருவானது.

ரூ. 2 லட்சம் கொடுத்து பிரம்மாண்ட பிரிட்ஜ் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

அவர்கள் sansun என்ற பெயரில் தனியாக இன்ஸ்டா பக்கம் தொடங்கி அதன் மூலம் சந்தோஷ் மற்று சுனிதாவுக்கு தங்களது ஆதரவுகளை தந்து வருகின்றனர். இந்த ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை இப்போது சந்தோஷ் மற்றும் சுனிதா நிறைவேற்றி வைத்துள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Sunita Gogoi (@sunitagogoi_offl)அதாவது ரசிகர்களின் ஃபேவரெட் ஜோடியான சந்தோஷ் - சுனிதா இருவரும் சேர்ந்து விரைவில் நடிக்கவுள்ளனர். இதற்கான பிளானிங் நடந்து வருவதாக சுனிதா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லை படு ரொமாண்டிக் மோடில் எடுக்கப்பட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்றையும் சுனிதா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த பாடலில் சந்தோஷ் - சுனிதா சேர்ந்து நடித்துள்ளனர். இது வெறும் ட்ரைலர் தான் மெயின் பிக்சர் இருக்கு என்றும் சுனிதா தெரிவித்துள்ளார். இதை பார்த்த sansun ரசிகர்கள் பயங்கர ஹேப்பி. அதே நேரம் குக் வித் கோமாளி போட்டியாளர்கள் செம்ம ஷாக்கில் கமெண்ட் பாக்ஸில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, Vijay tv