ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

VJ Rakshan: சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் குக் வித் கோமளி ரக்‌ஷன் - வைரல் படங்கள்!

VJ Rakshan: சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் குக் வித் கோமளி ரக்‌ஷன் - வைரல் படங்கள்!

வி.ஜே.ரக்‌ஷன்

வி.ஜே.ரக்‌ஷன்

ஒருபக்கம் போட்டியாளர்கள் மறுபக்கம் கோமாளிகள் என, ரசிகர்களை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தனது ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் தான் கலந்துக் கொண்ட நினைவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், குக் வித் கோமாளி தொகுப்பாளர் ரக்‌ஷன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருபக்கம் போட்டியாளர்கள் மறுபக்கம் கோமாளிகள் என, ரசிகர்களை வயிறு குலுங்கி சிரிக்க வைக்கிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
 
View this post on Instagram

 

A post shared by Rakshan (@rakshan_vj)இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், ரேகா, உமா ரியாஸ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதனை அறந்தாங்கி நிஷாவுடன் இணைந்து ரக்‌ஷன் தொகுத்து வழங்கினார். முதல் சீசனில் குக் வித் கோமாளி டைட்டிலை வென்றார் வனிதா, இரண்டாவதாக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2-ம் சீசனில் செமி ஃபைனல்ஸ் முடிந்துள்ளது. அப்படியெனில் சீக்கிரம் நிகழ்ச்சி முடிந்து விடுமா என ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில், வைல்டு கார்டு சுற்று நடைபெற இருப்பதை நினைவுப்படுத்த விரும்புகிறோம்.

இரண்டாம் சீசன் ஆரம்பிக்கும் நேரத்தில் நிஷா பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்ததால், இதனை ரக்‌ஷன் மட்டும் சோலோவாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஆரம்பத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய 'அது இது எது' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது போது எடுக்கப்பட்ட நெகிழ்ச்சியான புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரக்‌ஷன். இந்தப் படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv