Home /News /entertainment /

5 வருஷமா லவ் பண்றோம்.. இந்த வருஷம் கல்யாணம்! ரகசியத்தை உடைத்த குக் வித் கோமாளி புகழ்

5 வருஷமா லவ் பண்றோம்.. இந்த வருஷம் கல்யாணம்! ரகசியத்தை உடைத்த குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

தனது காதலி குறித்து புகழ் மனம் விட்டு பேசியுள்ளார். புகழுக்காக ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு’ பாடல் ஒலிக்கப்படுகிறது

  குக் வித் கோமாளி புகழ் முதன்முறையாக தனது காதலை பற்றியும், கல்யாணம் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர்களின் பல நாள் கேள்விக்கு இன்றைய குக் வித் கோமாளி ஷோவில் பதில் கிடைத்து விட்டது.

  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன்-3 தொடங்கி 2 வாரம் முடிந்து விட்டது. இன்று 3வது வார எபிசோடு ஒளிப்பரப்பாகவுள்ளது.விஜய் டிவி-யில் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற மெகாஹிட் ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை விடவும் குக் வித் கோமாளி ஷோவை ரசிப்பவர்கள் இங்கு ஏராளம்.

  சமையல் ஷோவை வித்தியாசமான பரிமாணத்தில் ஒளிபரப்பி ரசிகர்களின் மனதில் நிற்கிறது குக் வித் கோமாளி. எந்த டிவி சேனல்களும் முயற்சிக்காத புத்தம் புதிய சமையல் ஷோவை காமெடி கலந்து கொடுக்கும்  குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசன் தொடங்கி அதுவும் எதிர்பார்த்தை விட டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது.

  இதையும் படிங்க.. அடங்காத அர்ச்சனா.. சந்தியாவுக்கு எதிராக அடுத்து செய்ய போகும் சதி வேலை இதுதான்!

  ஏற்கனவே ஒளிபரப்பான சீசன் மூலம் புகழ்,ஷிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தனர். முதல் சீசனை விட இரண்டாம் சீசன் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதிலும் குறிப்பாக கோமாளி புகழுக்கு வேற லெவலில் ரீச் கிடைத்தது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

  இந்த காரணத்தினால் புகழ், குக் வித் கோமாளி சீசன் 3ல் இடபெறமாட்டார் என்ற தகவல்கள் கசிந்தன. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3 இன்ட்ரோவில் புகழ் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தை தந்திருந்தது. 2வது வார எபிசோடில் புகழ் வந்து விட்டார். அந்த வார எபிசோடும் களைக்கட்டியது.,

  இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வீட்டில் ஏற்பட்ட சோகம்… ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

  இன்று இரவு இந்த வாரத்திற்கான எபிசோடு ஒளிப்பரப்பாகவுள்ளது. அதில் தான் முதன் முதலாக தனது காதலி குறித்து புகழ் மனம் விட்டு பேசியுள்ளார். புகழுக்காக ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு’ பாடல் ஒலிக்கப்படுகிறது. உடனே புகழ் வெட்கப்பட, செஃப் வெங்கடேஷ் காதல் கதை பற்றி கேட்கிறார். அப்போது பதில் சொன்ன புகழ், “சுமார் 5 வருடங்களாக பென்ஸியை காதலித்து வருகிறேன். விஜய் டிவிக்கு நான் வருவதற்கு முன்பே சிரிப்புடா நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை அவர் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். குக் வித் கோமாளியில் பவித்ரா, தர்ஷாவுடன் நான் செய்த அட்காசங்கள், லூட்டிகளை பார்த்து இப்படியே செய், ஆடியன்ஸ் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். நான் தப்பா எடுத்து கொள்ள மாட்டேன் என முழு நம்பிக்கையுடன் பேசினார். அவரும் கோயம்புத்தூர் தான். இந்த வருடம் கல்யாணம் பண்ணிடுவேன்” என்று ஒரே போடாக போட்டு மொத்த செட்டையும் ஹாப்பி ஆக்கிவிட்டார் புகழ்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Cook With Comali Season 2, Vijay tv

  அடுத்த செய்தி