விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பு தளத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் - கவனம் பெறும் புகைப்படம்!

புகழ் - விஜய் சேதுபதி

படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் இருக்கும் படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

  • Share this:
    படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் இருக்கும் படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும்,'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பலருக்கும் விருப்பமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது. முதல் சீசனை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசனிலும் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களைக் கவர்ந்துளார் புகழ். தொலைக்காட்சியை தொடர்ந்து இப்போது மெதுவாக திரையுலகிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே அஜித், விஜய் மற்றும் அருண் விஜய் ஆகியோரின் படங்களில் புகழ் ஒப்பந்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    19 வருடங்களுக்குப் பிறகு தங்கச்சி பாப்பா பிறந்த மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை!

    இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கும் 'வி.ஜே.எஸ் 46' படத்தில் புகழ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் பைக்கில் விஜய் சேதுபதியின் பின்னால் புகழ் அமர்ந்திருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் புகழ் நடிப்பதாகவும், அது அவரை இன்னும் உயரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: