’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பிரபலமான புகழ் கடந்த வாரம் கார் வாங்கியதை, தாங்களே வாங்கியது போல ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
கடலூரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த புகழ், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி பெரும் பிரபலத்தைக் கொடுத்தது. முதல் சீசனில் போட்டியாளர் ரம்யா பாண்டியன் மீது ஈர்ப்பு கொண்டவராக ரசிகர்களை மகிழ்வித்தார்.
புகழ் இப்போது 'குக்கு வித் கோமாளி' சீசன் 2-ல் கலக்கி வருகிறார், மேலும் 'வலிமை' மற்றும் 'தளபதி 65' ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களைப் பெற்றுள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் சமீபத்தில் ஒரு புதிய காரை வாங்கி அதன் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். டிரைவர் முதல் க்ளீனர் வரை அனைத்து வேலைகளையும் செய்த தான், இன்று கார் வாங்கியிருப்பதை பெருமிதமாக பகிர்ந்துக் கொண்டார்.
இந்நிலையில் பகழ் கார் வாங்கி விட்டார், ஆனால் அவரது நண்பர் பாலா இன்னும் வாங்கவில்லை என ஒரு மீம் இணையத்தில் பரவியது. அதற்கு பதிலளித்திருக்கும் புகழ், ‘இது பாலாவோடதும் தான். நாங்க ரெண்டு பேரும் வேற வேற இல்ல’ எனத் தெரிவித்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்