Home /News /entertainment /

கோயிலில் குக் வித் கோமளி புகழ்.. அதுவும் யாருடன் தெரியுமா?

கோயிலில் குக் வித் கோமளி புகழ்.. அதுவும் யாருடன் தெரியுமா?

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளில் கோமாளியாக பங்கேற்று புகழ் ரசிகர்கள் மனம் கவர்ந்தார்

    விஜய் டி.வி.யின் நகைச்சுவை நாயகனாக வலம் வரும் புகழ், தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    2016ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிரிப்புடா’ என்ற காமெடி நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் புகழ். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அது இது எது’ நிகழ்ச்சியில் வரும் சிரிச்சா போச்சு சுற்றில் பெண் வேடம் உள்ளிட்ட பல கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அதன் பின்னர் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் சில சீசன்களிலும் பங்கேற்ற புகழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    குரூப்பாக காமெடி செய்து கொண்டிருந்த புகழை பட்டி, தொட்டி எல்லாம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாக்கியது. குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய நிகழ்ச்சிகளில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மனம் கவர்ந்தார். இரண்டு சீசன்களிலும் இவரும், ஷிவாங்கியும் செய்த சேட்டைகள் மற்றும் காமெடிகளை ரசிகர்கள் மறக்கவே முடியாது. இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை அடுத்து புகழுக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    என்னை மன்னித்து விடு.. கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி கேப்ரில்லா!

    சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ மற்றும் நடிகர் சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் சிறிது நேரமே வந்தாலும், ரசிகர்கள் மனதில் நிற்கும் படியாக காமெடியில் பின்னிபெடலெடுத்தார். தற்போது ஹீரோவாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரது படத்திலும் புகழ் நடித்து வருகிறார்.

    இது என்ன இப்படியொரு ட்விஸ்டா இருக்கு! தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் திடீர் மாற்றம்

    என்ன தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும், தன்னை வளர்த்துவிட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும், ரசிகர்களையும் புகழ் மறப்பது கிடையாது. ஷூட்டிங் இல்லாத சமயத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை குதூகலமாக்கி வருகிறார். அதேபோல் சோசியல் மீடியாவிலும் தன்னைப் பற்றி அப்டேட்கள் மற்றும் லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.



    கடந்த பிப்ரவரி மாதம் புகழ் தனது காதலி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் புகழ் தான் காதலிக்கும் பெண்ணின் பெயர் பென்சி என்றும், கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும் என்றும் கூறியிருந்தார்.



    இந்த செய்தியை அடுத்து தற்போது புகழ் மீண்டும் தனது பர்ஷனல் விஷயத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோவை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோயில் ஒன்றில் புகழ் தனது அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, லைக்குகளையும் வாரி குவித்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி