Home /News /entertainment /

விருதுநகர் சிறையில் குக் வித் கோமாளி புகழ் - வெளியான வீடியோ

விருதுநகர் சிறையில் குக் வித் கோமாளி புகழ் - வெளியான வீடியோ

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

    குக் வித் கோமாளி புகழ் சிறையில் இருந்து வெளிவரும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.

    நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. பின்னர் குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்திலும் அவர் கலந்துக் கொண்டார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடித்து வருவதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். தற்போது அருண் விஜய்யுடன் அவர் நடித்துள்ள யானை திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதோடு தான் காதலிக்கும் பெண்ணையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் புகழ்.




    சில நேரங்களில் குட் பை அவசியம்... ரோஜா சீரியலை விட்டு விலகும் அர்ஜூன் சிபு சூர்யன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அவர் விருதுநகர் சிறையில் இருந்து வெளிவரும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, புகழ் எதற்காக சிறைக்குச் சென்றார் என கேள்வி எழுப்பினர். பின்னர் தான் அது ஷூட்டிங் என்பது தெரிய வந்தது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, Vijay tv

    அடுத்த செய்தி