குக் வித் கோமாளி புகழ் காட்டில் பட மழை! முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம்?

விஜய் டிவி புகழ்

அஜித்தின் 'வலிமை' மற்றும் விஜய்யின் 'தளபதி 65' ஆகிய படங்களிலும் புகழ், முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 • Share this:
  குக் வித் கோமாளி புகழ், மாஸ் ஹீரோ ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் புகழ். ஏற்கனவே பல சுவாரஸ்யமான திரைப்படங்களில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

  இயக்குநர் ஹரி இயக்கும் அருண் விஜய்யின் புதிய திரைப்படத்தில் புகழ் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதோடு அஜித்தின் 'வலிமை' மற்றும் விஜய்யின் 'தளபதி 65' ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், விஜய் சேதுபதியின் அடுத்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. ’வி.ஜே.எஸ் 46’ என்றழைக்கப்படும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் புகழ் நடிப்பது அரவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: