Home /News /entertainment /

வருங்கால மனைவிக்கு பங்களாவை பரிசளிக்கும் குக் வித் கோமாளி புகழ்?

வருங்கால மனைவிக்கு பங்களாவை பரிசளிக்கும் குக் வித் கோமாளி புகழ்?

காதலியுடன் புகழ்

காதலியுடன் புகழ்

புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி புகழ் தனது வருங்கால மனைவியுடன் செய்த இன்ஸ்டகிராம் ரீல் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

    'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற புகழ், தற்போது பிஸியான நகைச்சுவை நடிகராகவும் மாறிவிட்டார். தற்போது ஏ.ஆர். முருகதாஸின் 'ஆகஸ்ட் 16 1947', விஜய் சேதுபதியின் 46-வது படம் மற்றும் சந்தானத்தின் 'ஏஜெண்ட் 'கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் தனது அனைத்து முக்கியமான விஷயங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

    புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியாவை வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அதை இருவரும் தங்கள் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது பிரபல வடிவேல்-கோவை சரளா காமெடியை இருவரும் இமிடேட் செய்து, இன்ஸ்டகிராம் ரீல்ஸில் வெளியிட்டுள்ளனர்.

    15-வது திருமண நாளில் இரண்டாவது குழந்தையின் வருகையை அறிவித்த ’விக்ரம்’ பிரபலம்!



     




    View this post on Instagram





     

    A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)






    .”போற காரியம் மட்டும் சக்சஸ் ஆச்சு, இந்த ஒன்றையணா வீட்ட காலி பண்ணிட்டு, அடையாறுல உனக்கொரு பங்களா வாங்கி தரேன். அதுக்கப்புறம் நான் ராஜா” என புகழ் சொல்ல, ”நா ராணிங்களா” என்கிறார் பென்சியா. அதற்கு “ம்ம்ம் மகாராணி” என்கிறார் புகழ். இந்த வீடியோ தற்போது மூன்றரை லட்சம் லைக்ஸ்களை கடந்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி