விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் மிக முக்கியமானவர். இந்நிகழ்ச்சி அவரை மிக பிரபலமாக்கியுள்ளது. இரண்டு சீசன்களிலும் தனது நகைச்சுவைகளுக்காக பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
மெக்கானிக் கடைகள், வாட்டர் வாஷ் சர்வீசஸ் செய்யும் இடங்கள் போன்றவற்றில் வேலை செய்துக் கொண்டிருந்த புகழ் கடலூரைச் சேர்ந்தவர். பின்னர் நடிகர் உதயராஜ் மூலம் ஊடகங்களில் இறங்கினார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’சிரிச்சா போச்சு’, ’அது இது எது’, ’கலக்க போவது யாரு’ போன்றவற்றில் அங்கம் வகித்து, தற்போது ‘குக் வித் கோமாளி’யின் முகமாகவே மாறியிருக்கிறார்.
Priyanka Nalkari: ’பேச்சு சத்தம் கேட்டு தானா விழும் ஓட்டு’ – ’ரோஜா’ சீரியல் பிரியங்கா!
இந்நிலையில், தனக்கு நடந்த ஏமாற்றமான சம்பவத்தை உணர்ச்சிபூர்வமாக சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் புகழ். தாங்கள் நிகழ்ச்சியில் மட்டும் தான் கோமாளிகள், நிஜ வாழ்க்கையில் இல்லை எனத் தெரிவித்திருக்கும் புகழ் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுக்கூர்ந்துள்ளார். ஒருநாள் இயக்குநர் ஷங்கரின் அலுவலகத்திலுருந்து பேசுவதாக ஒரு ஃபோன் வந்ததாகவும், ஃபோனில் பேசியவர் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு தன்னை வரச் சொன்னதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் புகழ்.
அழைப்பில் கூறியபடி அந்த இடத்துக்கு சென்ற புகழ் ஏமாற்றமடைந்திருக்கிறார். காரணம் அந்த ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாம். யாரோ ஷங்கர் பெயரை பயன்படுத்தி புகழை ஏமாற்றியிருக்கிறார்கள். இதனை உருக்கமாக குறிப்பிட்ட அவர், நிகழ்ச்சி வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு எனத் தெரிவித்திருக்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்