ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சபரிமலைக்கு சென்ற குக் வித் கோமாளி புகழ்... உடன் சென்ற கன்னி சாமி யார் தெரியுமா?

சபரிமலைக்கு சென்ற குக் வித் கோமாளி புகழ்... உடன் சென்ற கன்னி சாமி யார் தெரியுமா?

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

புகழ் சபரிமலைக்குச் செல்லும் வீடியோவை, விஜய் டிவி பிரபலம் ரித்திகா தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குக் வித் கோமாளி புகழ் சபரிமலைக்கு செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருக்கிறார் விஜய் டிவி தமிழ் ரித்திகா.

நடிகராக வேண்டும் என கடலூரிலிருந்து சென்னைக்குச் சென்ற புகழ், 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன்முதலில் கலந்துக் கொண்டார். இருப்பினும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அவருக்கு பெரும் புகழ் கிடைத்தது. குக் வித் கோமாளி இரண்டாம் பாகத்தில் கலந்துக் கொண்ட அவர், தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்திலும் பங்கு பெற்றுள்ளார்.

இதற்கிடையே விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகழ் சினிமாவில் நடிப்பதால், நேர பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகினார். அஜித்துடன் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய்யின் யானை, விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி உள்ளிட்ட படங்களில் நடித்தார் புகழ்.

உலகளவில் 5000 கோடி வசூலை நெருங்கும் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்!
 
View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தனது நீண்டநாள் காதலி பென்ஸியாவை கரம்பிடித்தார். அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தன. இந்நிலையில் தற்போது அவர் சபரிமலைக்கு மாலை போட்டு, இருமுடி கட்டிச் செல்லும் வீடியோவை, விஜய் டிவி பிரபலம் ரித்திகா தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். புகழுடன் கன்னி சாமியாக குக் வித் கோமாளி சக்தியும் சென்றிருக்கிறார். தற்போது அந்த வீடியோ லைக்ஸை குவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv