Home /News /entertainment /

ஹோம்லி போதும்... கிளாமர் ரூட்டை டிக் செய்த குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி!

ஹோம்லி போதும்... கிளாமர் ரூட்டை டிக் செய்த குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி!

பவித்ரா லட்சுமி

பவித்ரா லட்சுமி

பெரும்பாலான குக் வித் கோமாளி ரசிகர்கள், ஒரு குக்கிங் ஷோவை இவ்வளவு சுவாரசியமாக, காமெடியாக எடுத்து செல்ல முடியுமா என்கிற ஆச்சரியத்திலேயே ரசிகர்களாக மாறினார்.

  'குக் வித் கோமாளி' சீசன் 2 வழியாக எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதை கவர்ந்த நம்ம கோயம்புத்தூர் பொண்ணு பவித்ரா லக்ஷ்மி, இவ்வளவு செக்ஸியாக போஸ் கொடுப்பாரா? என்று பலரும் மூக்கில் மேல் விரல் வைக்கிறார்கள்.

  பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 வழியாக 'பக்கா ஹோம்லி கேர்ள்' ஆக வலம் வந்து ஆண்கள், பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் ரசிகர்களை சேர்த்த பவித்ரா லக்ஷ்மி, தற்போது மேலதிக திரைப்பட வாய்ப்புகளை பெறும் நோக்கத்தின் கீழ், மார்க்கெட்டை கைப்பற்ற விரும்பும் நடிகைகளின் வழக்கமான "பிரம்மாஸ்திரத்தை" கையில் எடுத்துள்ளார். அதாவது, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது!

  பெரும்பாலான குக் வித் கோமாளி ரசிகர்கள், ஒரு குக்கிங் ஷோவை இவ்வளவு சுவாரசியமாக, காமெடியாக எடுத்து செல்ல முடியுமா என்கிற ஆச்சரியத்திலேயே ரசிகர்களாக மாறினார். மறுகையில் 'க்யூட்டான' பெண்கள் சமைக்க வருகிறார்களே என்பதற்காகவே சிலர் குக் வித் கோமாளி ஷோவை விரும்பி பார்க்க தொடங்கினர். அப்படியானவர்கள் தாறுமாறாக ஜொள்ளு விட்ட லிஸ்டில் பவித்ரா லக்ஷ்மிக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

  இன்னும் சொல்லப்போனால், இதற்கு முன்பு நடன நிகழ்ச்சிகளான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா", "மானாட மயிலாட" போன்ற நிகழ்ச்சிகளிலும் பவித்ரா லக்ஷ்மி கலந்துக் கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் வழியாக பவித்ராவுக்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம், புகழ் கிடைக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி சீசன் 2 வழியாக அது சாத்தியமானது.

  அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!

  இதன் விளைவாக பவித்ரா சில குறும்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்தார். பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் வர தொடங்கின. அதில் முக்கியமாக, நகைச்சுவை நடிகர் சதீஷிற்கு ஜோடியாக "நாய்சேகர்" என்கிற படத்தில் பவித்ரா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்து உள்ளார், இந்த திரைப்படம் ரிலீஸிற்காக காத்திருக்கிறது.

  என்றும் என்றென்றும்... ரஜினியுடனான படத்தைப் பகிர்ந்த இசைஞானி இளையராஜா!

  சோஷியல் மீடியாக்களில் மிகவும் பிஸியான நடிகைகளில் பவித்ரா லக்ஷ்மியும் ஒருவர். அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷிபடுத்திக் கொண்டே இருப்பார். அதில் லேட்டஸ்ட் போட்டோக்கள் தான் - இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள 5 புகைப்படங்கள்.

  Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!

  தொடைகள் தெரியும் படியான மாடர்ன் டிரெஸ், மிகவும் வித்தியாசமான லுக்கிற்காக கர்லி ஹேர்ஸ்டைலில் காட்சி அளிக்கிறார் பவித்ரா. மேலும் உதட்டில் கை வைத்து, கைகளை தூக்கி, கால்களை மடக்கி என வகை வகையாக போஸ் கொடுத்து ரசிகர்களை டெம்ப்ட் ஏற்றுகிறார் பவித்ரா லக்ஷ்மி. ஒரு கண்ணில் ரசித்துக்கொண்டே, மறு கண்ணால் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர் பவித்ரா லக்ஷ்மியின் ரசிகர்கள்.
  இன்ஸ்டாகிராம் வழியாக பவித்ரா ஷேர் செய்த 5 புகைபடங்களில் 4-இல் அவர் தனியாகவும், ஒன்றில் மட்டும் "ஜோடி" ஆகவும் போஸ் கொடுத்து உள்ளார். ஆனால் கிசுகிசுக்களை தள்ளி வைக்கும்படி அந்த நபர் தனது " நண்பர்" என்று கேப்ஷனில் குறிப்பிட்டு உள்ளார் பவித்ரா லக்ஷ்மி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Cook With Comali Season 2, Vijay tv

  அடுத்த செய்தி