Pavithra Lakshmi: குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி உருக்கமான பதிவு

Pavithra Lakshmi: குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா லட்சுமி உருக்கமான பதிவு

பவித்ரா லட்சுமி

நேற்றைய எபிசோடில் அஸ்வினுக்கும், பவித்ராவுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது.  இறுதியில் பவித்ரா வெளியேற்றப்பட்டார்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

    தற்போது ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சரத், சுனிதா ஆகியோர் கோமாளிகளாக பங்கு பெற்றுள்ளனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள குக் வித் கோமாளிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

    SP Jananathan: சிகிச்சை பலனின்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம்

    இரண்டாவது சீசனில் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா எலிமினேட் ஆன நிலையில் மற்ற 5 பேரும் போட்டியில் இருந்தார்கள். நேற்றைய எபிசோடில் அஸ்வினுக்கும், பவித்ராவுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது.  இறுதியில் பவித்ரா வெளியேற்றப்பட்டார்.



    இந்நிலையில் தற்போது ட்விட்டரில், ”அது ஒரு அற்புதமான பயணம். எனது அன்பான மக்களே உங்களது நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவிற்கும் எனது அன்பான நன்றி. குக் வித் கோமாளி 2 குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    ஷேன் நிகாம் ஜோடியாக மலையாளத்தில் 'உல்லாசம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பவித்ரா, சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: