Home /News /entertainment /

3 மாசம் லோன் கட்டல.. ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்த குக் வித் கோமாளி மணிமேகலை!

3 மாசம் லோன் கட்டல.. ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்த குக் வித் கோமாளி மணிமேகலை!

மணிமேகலை

மணிமேகலை

அடுத்த மாதம் லோன் கட்டவில்லை என்றால் காரை எடுத்துச் சென்றுவிடுவோம் என்று கூறினார்களாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்களை யூடியூப் பேட்டி ஒன்றில் ஷேர் செய்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சன் மியூசிக் ஆங்கராக அறிமுக ஆகி இன்று குக் வித் கோமாளி மணியாக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் விஜே மணிமேகலை காதல் திருமணம் செய்து கொண்டார். லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை மணிமேகலை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்பு இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர். வரும் டிசம்பர் மாதம் இவர்கள் தங்களது 5வது வருட திருமண நாளை கொண்டாட உள்ளனர்.

    ஒரே மேடையில் இந்து - முஸ்லீம் முறைப்படி திருமணம்.. ஷாக் கொடுத்த அமீர் - பாவ்னி!

    பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் தொடர்ந்து கெரியரில் முன்னேறி இப்போது ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளனர். பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ள இவர்கள் லவ் மேரேஜ் செய்த ஆரம்ப காலங்களில் அதாவது முதல் 2 வருடத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். வாடகைக்கு வீடு தேடி அலைந்ததில் தொடங்கி, நடந்தே சென்று வீடு தேடியது, கஷ்டப்பட்டு கடனை அடைத்தது என பல விஷயங்களை மணிமேகலையும் ஹூசைனும் லைஃபில் சந்தித்து இருக்கிறார்கள்.

    பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையுடன் சிம்பு.. இந்த சந்திப்பு எப்ப நடந்தது?



     




    View this post on Instagram





     

    A post shared by Mani Megalai (@iammanimegalai)






    ஒருமுறை மணிமேகலை விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கண்கலங்கியபடி இதுக் குறித்து பேசி இருந்தார். தற்போது  BMW கார், வீடு, சொகுசு பைக் என மிகப் பெரிய இடத்தை அடைந்திருக்கும் இவர்கள் முதன் முதலாக வாங்கிய காருக்கு 3 மாதம் லோன் கட்டவில்லையாம். அதற்காக பேங்கில் இருந்து இவர்களை தேடி அதிகாரிகள் வந்து, அடுத்த மாதம் லோன் கட்டவில்லை என்றால் காரை எடுத்துச் சென்றுவிடுவோம் என்று கூறினார்களாம். அதே போல் இந்த பிரச்சனை எல்லாம் சரிசெய்ய மணிமேகலை பர்சனல் லோன் கேட்டு பல பேங்குக்கு அலைந்து இருக்கிறாராம். இப்படி பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை தாங்கள் அடைந்து இருப்பதாக மணிமேகலை ஷேர் செய்து இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv, Youtube

    அடுத்த செய்தி