ரசிகர்களை அதிகம் கவர்ந்த, தொலைக்காட்சித் தொகுப்பாளர் லிஸ்டில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஃபேவரெட் கோமாளியாக மாறியவர் தான் மணிமேகலை. இன்ஸ்டாகிராமில் லட்சகணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள மணிமேகலைக்கு சமூகவலைத்தளத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது, இவர் தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து நடத்தும் யூடியூப் சேனல் வீடியோக்களும் லட்சங்களில் வியூஸ்களை அள்ளுகிறது. இதில் இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இதையும் படிங்க.. முத்தழகுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பூமி செய்த துரோகம்!
இதைத்தவிர்த்து மணிமேகலை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்கிறார். 2 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 3 ஆவது சீசனிலும் மணிமேகலை ஆல் ரவுண்டராக் அசத்தி கெத்து காட்டுகிறார். சொல்லப்போனால் சன் மியூசிக், விஜே, ஆங்கரிங்கை விட மணிமேககலைக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதனால் மணிமேகலை ரசிகர்களுக்காக அவ்வப்போது லைவில் உரையாடுவார். ரசிகர்கள் கேள்விக்கும் பதில் சொல்வார் இப்படி ரசிகர்களுடனும் ஆக்டிவாக இருப்பார்.
அப்படி தான் சமீபத்தில் மணிமேகலை, ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி இருக்கிறார். அப்போது மணிமேகலையின் தீவிர ரசிகர் ஒருவர், நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என கமெண்ட் கொடுக்க வழக்கம் போல் அதை கலாய்த்து விட்டார். மற்றொரு ரசிகர் ஒருவர், ”நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது?” என கேட்டு இருக்கிறார். அதற்கு மிகவும் கூலாக மணிமேகலை சத்தியமாக எனக்கு நடிக்க வராது, நடிக்கவும் தெரியாது என கூறியுள்ளார்.
இதை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். கடந்த ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோல் பண்ணதை மணி மறந்து விட்டீங்க என்று விளையாட்டாக கலாய்த்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.