ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்திரேலியாவுக்கு பறந்த குக் வித் கோமாளி மணிமேகலை.. குவியும் வாழ்த்து!

ஆஸ்திரேலியாவுக்கு பறந்த குக் வித் கோமாளி மணிமேகலை.. குவியும் வாழ்த்து!

குக் வித் கோமாளி மணிமேகலை

குக் வித் கோமாளி மணிமேகலை

ஆஸ்திரேலியா மெல்போர்ன் சிட்டியில் இருந்தப்படி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார் மணிமேகலை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருக்கிறார். இதை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

  சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. சன் மியூசிங் ஆங்கர், விஜே என்பதை எல்லாம் தாண்டி இன்று குக் வித் கோமாளி மணிமேகலை என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஃபேவரெட் கோமாளியாக மாறி விட்டார் மணி. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள இவருக்கு சமூகவலைத்தளத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதுமட்டுமில்லை மணிமேகலை தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து நடத்தும் யூடியூப் சேனல் வீடியோக்களும் லட்சங்களில் வியூஸ்களை அள்ளுகிறது.

  குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருந்த நிலையில், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இணையதள நிகழ்ச்சிகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என மணிமேகலை காட்டில் அடை மழை தான். இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு கலை நிகழ்ச்சிக்காக மணிமேகலை ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் மட்டுமில்லை அவருடன் விஜய் டிவி புகழ், சாம் விஷால், பாலா, நிகில் மேத்யூ,மாளவிகா சுந்தர், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகியோரும் சென்றுள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Mani Megalai (@iammanimegalai)  ஆஸ்திரேலியா மெல்போர்ன் சிட்டியில் இருந்தப்படி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கும் மணிமேகலை இந்த புகைப்படத்தை எடுத்தது புகழ் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லை கணவர் ஹூசைனை சென்னையில் விட்டுட்டு வந்ததால் அவரையும் வெறுப்பேற்றி ஆஸ்திரேலியாவில் இருப்பதை கெத்தா குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)  இந்த பக்கம் பார்த்தால் ஆஸ்திரேலியா மண்ணில் புகழ் குத்தாட்டம் போட்டு கொண்டிருக்கிறார். அதுவும் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து பிரின்ஸ் படத்தின் நான் யாரு பாடலுக்கு புகழின் கலக்கல் நடனம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Cook With Comali Season 2, Vijay tv