குக் வித் கோமாளி ஷகிலா பற்றி மணிமேகலை உருக்கமான பதிவு

குக் வித் கோமாளி ஷகிலா பற்றி மணிமேகலை உருக்கமான பதிவு

ஷகீலா உடன் மணிமேகலை

நடிகை ஷகிலா குறித்து குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனது சோஷியல் மீடியாவில் உருக்கமாக எழுதியுள்ளார்.

 • Share this:
  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார்.

  அந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் மணிமேகலை.

  இந்நிலையில் நேற்று ஷகிலாவுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு, “லவ் யூ ஷகிலா மம்மி. உங்களுடைய நேரத்தை எனக்காக ஒதுக்கி என்னை வந்து பார்த்ததற்கும் உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Mani Megalai (@iammanimegalai)


  நடிகை ஷகிலாவை கவர்ச்சி நடிகையாகவே மட்டுமே பலரும் பார்த்து வந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதை மாற்றியுள்ளது என்றே சொல்லலாம். குக் வித் கோமாளியின் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் அவரை அம்மா என்றே அழைத்து வருகின்றனர். இந்நிலையில் ஷகிலா குறித்த மணிமேகலையின் உருக்கமான பதிவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: