தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்த 'குக் வித் கோமாளி’ கனி: காரணம் கேட்டு ரசிகர்கள் ஷாக்

கனி திரு

ஒருவரது கேரக்டரை நிர்ணயிப்பது தாலி கிடையாது. என கணவருடன் 8 வருடம் லவ், 12 வருடம் திருமண வாழக்கை என சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

 • Share this:
  ஏன் தாலி போடுவதில்லை எனக் கேட்கும் ரசிகர்களுக்கு ‘குக் வித் கோமாளி’ கனி பதிலளித்துள்ளார்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் கனி. இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டிலை தட்டிச் சென்றார். குக் வித் கோமாளியில் அவர் அதிகம் காரக்குழம்பு செய்ததால், அவரை காரக்குழம்பு கனி என்று நெட்டிசன்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கனி, தியேட்டர் டி எனற யூ-ட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் தனக்கு ஒரு விஷயம் பற்றி அதிக கேள்விகள் வருவதாக தற்போது லைவ் வீடியோவில் விளக்கமளித்துள்ளார்.

  தான் ஏன் தாலி போடுவதில்லை என அதிக நபர்கள் கேட்பதாகக் குறிப்பிட்டுள்ள கனி, "தாலி போடுவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம், இடையில் புகுத்தப்பட்டது என நான் நம்புகிறேன். தமிழ் மரபு என்னவென்றால் மனதிற்கு பிடித்தவர்கள் மாலை மாற்றி இவன் என் துணை என சொல்லி வாழ தொடங்குவது தான் என நான் உறுதியாக நம்புகிறேன்.   
  View this post on Instagram

   

  A post shared by Kani Thiru (@kanithiru10)


  நான் தாலி கட்டிதான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ரொம்ப பிடித்தது அது. ஒரு அடையாளம் அது. எனக்கு மஞ்சள் நிற தாலி அதிகம் பிடிக்கும். அதற்கு பிறகு அதை மாற்றி காட்டுவார்கள். அதை கட்டியது என் புருஷன் கிடையாது, நிறைய சொந்தக்காரர்கள் தான் கட்டுவார்கள். அதை என் புருஷனுக்கு பதில் வேறு யாரோ போட்ட மூன்று முடிச்சு என்பதால் தான் எனக்கு அதன் மீது ஈடுபாடு இல்லாமல் போனது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  என் புருஷன் எனக்கு கட்டிய மஞ்சள் தாலியை நான் பத்திரமாக உயிர் போல பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஒருவரது கேரக்டரை நிர்ணயிப்பது தாலி கிடையாது. என கணவருடன் 8 வருடம் லவ், 12 வருடம் திருமண வாழ்க்கை என சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டு குழந்தை இருக்கிறது. இதை எல்லாம் விட கல்யாணம் ஆகிவிட்டது என சொல்ல வேறு எந்த அடையாளமும் தேவையில்லை.

  நான் வீடியோவுக்கு மட்டும் தாலி போட்டுகொண்டு மற்ற நேரத்தில் அதை கழட்டி போட்டுவிட்டு போகலாம். ஆனால் அப்படி ஏமாற்ற விரும்பவில்லை.இது தான் என் நிலைப்பாடு” என்று தெரிவித்திருக்கிறார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: