ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

குக் வித் கோமாளி கனியை தேடி போகும் பிரம்மாண்ட வாய்ப்பு?

குக் வித் கோமாளி கனியை தேடி போகும் பிரம்மாண்ட வாய்ப்பு?

குக் வித் கோமாளி கனி

குக் வித் கோமாளி கனி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கனிக்கு மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குக் வித் கோமாளி புகழ் கனி சமையல் நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கராக களம் இறங்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

சின்னத்திரை ரசிகர்களுக்கு கனி அக்கா என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரின் தமிழ் மற்றும் சமையல் தான். இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளான இவர் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் டைட்டில் வின்னர் ஆன போது ரசிகர்கள்

அப்படி கொண்டாடினர். வித விதமான ரெசிப்பிகளை சமைத்து செஃப்களை அசர வைத்தார் கனி. , இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜய லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி என்பதை எல்லாம் தாண்டி கனிக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஏகப்பட்ட அடையாளங்கள் உள்ளன. தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த கனி, தனது யூடியூப் சேனலில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை எளிமையான முறையில் ரசிகர்கள் கூறினார்.

விஜய் டிவி பிரபலத்தின் சர்ச்சை புகைப்படம்.. ஏன் இப்படி? விளாசும் ரசிகர்கள்!

அதன் பின்பு வித விதமான சமையல்களை செய்து காட்டி யூடியூபில் லைக்ஸ்களை அள்ளி வருகிறார். இவருக்கு 2 பெண் பிள்ளைகள். ஒருபக்கம் கணவர், குடும்பம் மறுபக்கம் தனது கெரியரில் கவனம் என பெண்கள் பலருக்கும் காரக்குழம்பு கனி மிகப் பெரிய இன்ஸ்ப்ரேஷன் என்றே சொல்லலாம். மக்கள் தொலைக்காட்சியி்ல் முழுக்க முழுக்க தமி்ழிலே பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். இதுத்தவிர ஃபேஷன் டிசைனிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். வெள்ளித்திரையில் சில படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிப்புரிந்து இருக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கனிக்கு மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது. இன்ஸ்டாவிலும் படும் ஆக்டிவாக இருக்கிறார் கனி. இந்நிலையில் மீண்டும் அவரை தேடி ஆங்கர் வாய்ப்பு சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை அவருக்கு அழைப்பு சென்று இருப்பது சன் டிவியில் இருந்து என்றும் கூறப்படுகிறது.

சித்தி 2 முடிந்தாலும் சின்னத்திரையில் வெண்பா மவுசு இன்னும் குறையவில்லை!

அதாவது சன் டிவியில் விரைவில் தொடங்கவுள்ள சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கனி ஆங்கராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதுக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் இதுப்பற்றி கனியிடன் கேள்வி எழுப்பி சந்தேகத்தை தீர்த்து கொள்ள துடிக்கின்றனர். கூடிய விரைவில் இதற்கான பதில் கனியிடம் இருந்து கிடைக்கும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, Sun TV, Vijay tv