குக் வித் கோமாளி புகழ் கனி அக்காவின் மகளிர் தின போஸ்டை பார்த்த மொத்த ரசிகர்களும் ஷாக் ஆகிவிட்டனர். என்ன போஸ்ட் அது? வாங்க பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி கனி அக்கா பற்றிய அறிமுகமே தேவைப்படாது. மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது சீசனின் டைட்டில் வின்னர் கனி தான். இந்த குக்கிங் ஷோவில் கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கனி. இவர்
தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜய லட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி.இதைத்தவிர தனக்கான பல அடையாளத்தையும் கனி அக்கா சொந்தமாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க.. Fixed Deposit திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா வட்டி கிடைக்க போகுது.. எஸ்பிஐ சூப்பர் அப்டேட்!
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த கனி, தற்போது தனது யூ-ட்யூப் சேனலில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை எளிமையான முறையில் சொல்லும் கதை சொல்லியாகவும் மாறியிருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட தாலி குறித்து கனி பேசி இருந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து தனக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இதையும் படிங்க.. Fixed Deposit திட்டத்தில் இனி எக்ஸ்ட்ரா வட்டி கிடைக்க போகுது.. எஸ்பிஐ சூப்பர் அப்டேட்!
ஒருபக்கம் குக்கிங் வீடியோ, கதை சொல்லும் தோழி, குடும்ப தலைவி, 2 தங்கைகளுக்கு மூத்த அக்கா என இவரின் லைஃப் ஸ்டைல் பிஸியோ பிஸி. ஆனாலும் ரசிகர்களுக்காக அவ்வ்போது இன்ஸ்டா லைவில் வருவது, சில புகைப்படங்களை வெளியிடுவது என கனி சோஷியல் மீடியாவிலும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார். அந்த வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக
மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் பல சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் தங்களது இன்ஸ்டா, ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து இருந்தனர்.
அப்படித்தான் கனியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். அந்த போஸ்ட் சிலமணி நேரத்திலே இணையத்தில் வைரலானது. அதற்கு காரணம்,கனி அக்கா அதில் முதன்முறையாக வித்யாசமான தோற்றத்தில் இருந்தார். அதிகம் மேக்கப் போடாத, மிகவும் இயல்பான கருப்பு பேரழகியான கனி அக்காவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. உடனே அந்த போஸ்டுக்கு லைக்ஸ்களும், கமெண்டுகளும் குவிய தொடங்கின.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.