Cook With Comali: ஸ்விம்மிங் பூலில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா - ட்ரெண்டாகும் படம்!

Cook With Comali: ஸ்விம்மிங் பூலில் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா - ட்ரெண்டாகும் படம்!

தர்ஷா குப்தா

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், எப்போதும் தனது படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

  • Share this:
    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா தற்போது தான் நீச்சல் குளத்தில் இருக்கும் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமார் வென்றார். அதில் ரன்னராக ரம்யா பாண்டியன் இடம் பிடித்தார். இதனையடுத்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.



    இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் தர்ஷா குப்தா நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

    சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், எப்போதும் தனது படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தான் நீச்சல் குளத்தில் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தவிர விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: