விஜய் டிவியில் பல்வேறு தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து தான் வருகிறது. சீரியல்களை பார்க்க கூடிய பலரும் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல்களில் நடிக்க கூடிய பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இதானலேயே இவை மிகவும் ஹிட்டான ஒன்றாக மாறி விடுகிறது.
அதே போன்று அந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கான்செப்ட் சிறப்பானதாக இருந்தால் மக்கள் அதை தாமாகவே விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் டாப் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு உள்ளது
. குக் வித் கோமாளி ஷோ என்றாலே ஒரே காமெடியாக தான் இருக்கும். இதில் கோமாளிகளால் ஏற்படும் கலாட்டா ஒரு பக்கம் என்றால் தொகுப்பாளர் மற்றும் ஜட்ஜஸ் செய்ய கூடிய காமெடிகளும் சிறப்பாக இருக்கும். இது முழுக்க முழுக்க காமெடி ஷோ ஒருவரை ஒருவர் கலாய்த்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் 5 பிரபலத்தை பாடாய்படுத்தும் விவாகரத்து சர்ச்சை!
அதே போல ஜட்ஜஸின் காமெடி மெட்டீரியலாகவும் இந்த கோமாளிகள் இருந்து வருகின்றனர். இதற்கு முன்னர் இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில். தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் எல்லா சீசன்களும் பார்வையாளரை முற்றிலுமாக சிரிக்க வைக்க கூடியவையாக இருந்து வருகிறது. முந்தைய சீசன்களில் இருந்த முக்கிய கோமாளிகள் இந்த சீசன்களிலும் உள்ளனர். சிவாங்கி, பாலா, மணிமேகலை ஆகியோரும் மூன்றாவது சீசனில் உள்ளனர். இவர்களுக்காக இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம்.
உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. பெண் அரசியல் பிரபலம் கையால் விருது வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!
தற்போது இந்நிகழ்ச்சியில் ஆறு போட்டியாளர்கள் தான் மீதமுள்ளனர். மற்றவர்கள் எல்லோரும் ஒவ்வொரு வாரமும் எலிமினேட் ஆகிவிட்டனர். இந்நிலையில் கடந்த வாரம்
சந்தோஷ் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு முன்பு தொடர்ந்து மூன்று வாரங்கள் யாருமே எலிமினேஷன் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரையிலும் எல்லோரும் மிகவும் மகிழ்சியாக தான் இருந்தனர். கடந்த வாரம் சந்தோஷ் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், பலரும் இது குறித்து பேச தொடங்கினர். ஏன் அவரை எலிமினேட் செய்தார்கள் என்றும் கேட்க தொடங்கினர்.
இந்நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் யாருமே எதிர்பார்க்காத விதமாக வைல்டு கார்டு என்ட்ரியாக இருவர் வருவதாக காட்டப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரையும் பார்தததும் நிகழ்ச்சியில் உள்ள எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். யார் இவர்கள்? தீடீரென்று ஏன் இவர்கள் வருகிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கான விடை இந்த வாரம் தெரிந்து விடும். அதுவரை இந்த 2 புது வைல்டு கார்டு என்ட்ரி பற்றி யோசித்தபடியே இருங்கள்; இதற்கான விடை விரைவில் தெரியும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.