Home /News /entertainment /

cook with comali : இன்றைய எபிசோடில் வெளியேறியது இவரா? சோகத்தில் ரசிகர்கள்!

cook with comali : இன்றைய எபிசோடில் வெளியேறியது இவரா? சோகத்தில் ரசிகர்கள்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

cook with comali cwc : இன்றைய எபிசோடியில் குறைவான மதிப்பெண்கள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறியது சந்தோஷ் பிரதாப் என்பது தெரியவந்துள்ளது

    குக் வித் கோமாளி சீசன் 3ல் இன்றைய எபிசோடில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் ஃபேவரெட் போட்டியாளரான அந்த நடிகரின் எலிமினேஷன் போட்டியாளர்கள், கோமாளிகளை மட்டுமில்லை ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

    ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன தமிழ் சேனலாக இருந்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி. எத்தனையோ சேனல்கள் சமையல் நிகழ்ச்சிகளை வெறும் குக்கிங் ஷோவாக ஒளிபரப்பி வந்த நிலையில், குக் வித் கோமாளி ஷோ மூலம் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது விஜய் டிவி. 2 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள குக் வித் கோமாளியின் சீசன் 3 கடந்த ஜனவரி 22-ஆம் தேதி துவங்கி வெற்றிகரமாக டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.

    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்களாக அம்மு அமிராமி, அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், தர்ஷன், மனோபாலா, பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ராகுல் தாத்தா ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், ஷீத்தல் கிளாரின், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?

    இதில் வழக்கம் போல் 2 வாரத்திற்கு ஒருமுறை எலிமினேஷன் அரங்கேறி வருகிறது. அதன்படி இதுவரை போட்டியில் இருந்து ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோணிதாசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 2 வாரத்திற்கு முன்பு பாரதி கண்ணம்மா ரோஷினி எலிமினேட் ஆக வேண்டியது, அந்த பெயரை செஃப் பட் அறிவித்த பின்னர், மணிமேகலை, சந்தோஷ், செஃப் தாமு ஆகியோர் கதறி அ தொடங்கினர். பின்னர் நோ எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது.

    TV movies : மே தினம் ஸ்பெஷல் திரைப்படங்கள்… போட்டிப்போடும் அஜித், சூர்யா, சிம்பு!

    இப்படி இருக்கையில், தற்போது 7 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் உள்ளன. அதிலிருந்து ஒருவர், இந்த வாரம் வெளியேற போகிறார் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்படி இருக்கையில், இன்றைய எபிசோடியில் குறைவான மதிப்பெண்கள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறியது சந்தோஷ் பிரதாப் என்பது தெரியவந்துள்ளது. இதுக் குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    இந்த எலிமினேஷனை மக்கள் ஏற்க மறுக்கின்றனர். மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து இருக்கும் தங்க மகன் என அழைக்கப்படும் சந்தோஷ் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே வர வேண்டும் என ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி