குக் வித் கோமாளி சீசனில் போட்டியாளர்களை மட்டுமில்லை ரசிகர்களை அழ வைத்துவிட்டு எலிமினேஷன் ரவுண்டில் வெளியே சென்ற சந்தோஷ் பிரதாப், நடிகை த்ரிஷாவுடன் சேர்ந்து அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த அறிவிப்பு சந்தோஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 3ன் ஒவ்வொரு எபிசோடும் வேறலெவல் ரகம் தான். போன வாரம், செஃப் தாமுவாக மாறிய ஷிவாங்கி, ஸ்ருத்திகா கெட்டப்பில் குரோஷி என அதிரிபுதிரி காம்பினேஷனில் பட்டையை கிளப்பி இருந்தனர். குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பு சீசன் 3க்கு ஒருபடி மேலேயே கிடைத்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் இருக்கும் ஸ்பெஷல் இதுதான்!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான். அதை மேலும் அதிகரிக்கும் வகையில் வாராவாரம் கோமாளிகளுக்கு விதவிதமான கெட்டப்புகளை கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அசத்தி வருகின்றனர்.ரூம் போட்டு யோசித்து ஒவ்வொரு கான்ச்செப்டுகளை களத்தில் இறக்கி வருகின்றனர். இந்நிலையில் போன வாரம் சந்தோஷ் பிரதாப்பின் வெளியேற்றம் பலரையும் அழ வைத்திருந்தது. போட்டியாளர்களும் அவரின் எலிமினேஷனை நினைத்து கண்கலங்கினர்.
மே 1 அன்று குஷ்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் சர்ப்பிரைஸ்!
இப்படி இருக்கையில், இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என் ட்ரியாக 2 பேர் களத்தில் இறங்குகின்றனர். பிரபல காமெடியன் சுட்டி அரவிந்த், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வேட்டை முத்துக்குமார் தான் அந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள். அதுமட்டுமில்லை போன வாரம் சந்தோஷம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார், இந்த வாரம் அவர் த்ரிஷா நடிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் அந்த படத்தில் சந்தோஷ லீட் ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.