Home /News /entertainment /

cook with comali : புகழ் இடத்தை நிரப்புவார்களா இந்த புதிய 3 கோமாளிகள்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

cook with comali : புகழ் இடத்தை நிரப்புவார்களா இந்த புதிய 3 கோமாளிகள்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

cook with comali contestants: புதிய கோமாளியாக குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்பட்டது.

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன்-3 வருகிற ஜனவரி 22ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகுகிறது. மேலும் இதற்கான ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளது.

    விஜய் டிவி-யில் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் அவற்றில் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற மெகாஹிட் ரியாலிட்டி ஷோக்களாக இரு நிகழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் மற்றும் சமையல் ஷோவை வித்தியாசமான பரிமாணத்தில் ஒளிபரப்பி ரசிகர்களின் மனதில் நிற்கும் குக் வித் கோமாளி. தற்போது மிகப்பெரிய பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்தது. இந்த நிலையில் எந்த டிவி சேனல்களும் முயற்சிக்காத புத்தம் புதிய சமையல் ஷோவை காமெடி கலந்து கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்திய குக் வித் கோமாளியின் மூன்றாம் சீசன் தொடங்க இருக்கிறது.

    இதையும் படிங்க.. நான் முட்டாள்தனம் பண்ணிட்டேன் - வனிதா விஜயகுமார்

    ஏற்கனவே ஒளிபரப்பான சீசன் மூலம் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தனர். முதல் சீசனை விட இரண்டாம் சீசன் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த ஷோவின் முதல் சீசன் 2019 நவம்பர் 16 முதல் 2020 பிப்ரவரி 23 வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த சீசனை பிரபல ஆங்கர் ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகிய இருவரும் தொகுத்து வழங்க பிரபல சமையல் கலை நிபுணர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர்கள் ஜட்ஜஸ்களாக இருந்தனர். இதில் இறுதியாக வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

    இதையும் படிங்க.. வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

    குக் வித் கோமாளி சீசன் 2 2020 நவம்பர் 14 முதல் 2021 ஏப்ரல் 14 வரை முதல் சீசனை போலவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பானது. இந்த சீசனை ரக்ஷன் தொகுத்து வழங்க செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோரே ஜட்ஜஸ்களாக இருந்தனர். இந்த சீசனில் போட்டியாளர் கனி வெற்றி பெற்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த ஷோவின் சீசன் 3 ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யார் பங்கேற்க போகிறார்கள் வதந்திகளும் வெளிவந்தன. அதில், கிரேஸ் கருணாஸ், நடிகர் சந்தோஷ் பிரதாப், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் போட்டியாளராக வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.



    மேலும் புதிய கோமாளியாக குரேஷி, மூக்குத்தி முருகன், சூப்பர் சிங்கர் பரத் உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இதுவரை வெளியான 5 ப்ரோமோக்கள் மூலம், இந்த 3ம் சீசனில் ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல, பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சக்தி, மூக்குத்தி முருகன், குரேஷி, பரத் மேட்டரும் மேலும் இருவர் என மொத்தம் 10 பேர் கோமாளிகளாக இந்த சீசனில் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி