குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரையின் டாப் ஹிட் நிகழ்ச்சியாக இருக்கிறது குக் வித் கோமாளி. வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முதல் சீசனை காட்டிலும் 2 மற்றும் 3வது சீசன் பயங்கர ரீச். 2வது சீசனில் கனி, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா, பாபா பாஸ்கர், ஷகீலா, ரித்விகா, மதுரை முத்து, தீபா அக்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சீசனின் வெற்றியாளர் கனி. ஆனால் இதில் கலந்து கொண்ட அனைவருமே புகழின் வெளிச்சத்துக்கு சென்றனர். அஸ்வின் ஹீரோவானார். அதே போல் பவித்ரா லட்சுமியும் நாய் சேகர் படம் மூலம் நாயகியாக மாறினார்.
7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!
இந்த நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா , புகழ் மற்றும் பவித்ராவுடன் பயங்கர க்ளோஸ். நிகழ்ச்சியில் இருந்து அவர் எலிமினேட் ஆன அன்று செட்டில் இருந்த போட்டியாளர்கள், கோமாளிகள் அனைவரும் அழுதனர். அந்த நிகழ்ச்சியில் இருந்து வந்த பின்னர் வெள்ளித்திரையில் கவனத்தை செலுத்திய தர்ஷா, ‘ருத்ரதாண்டவம்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான செந்தூர பூவே சீரியலில் ஐஸ்வர்யா என்ற நெகடிவ் ரோலிலும் தர்ஷா நடித்து வந்தார். பின்பு சீரியலில் இருந்து விலகினார்.
பிக் பாஸ் வைஷ்ணவியை ஃபாலோ செய்த மர்மநபர்.. வெளியானது அதிர்ச்சி வீடியோ!
இதற்கு இடையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது ஃபோட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது தர்ஷா நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’ என்ற படத்தில் நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. . முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது.
“மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு ,பூஜையுடன் இனிதே தொடங்கியது. இந்த புகைப்படங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தர்ஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.