குக் வித் கோமாளி செஃப் தாமு பற்றி அவரின் மனைவி பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை பார்க்காத செஃப் தாமுவை ரசிகர்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருந்த செஃப் தாமுவை போட்டியாளர்கள் மட்டுமில்லை ரசிகர்கள் கூட அப்பா என்று தான் அழைக்கிறார்கள். 2 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் தற்போது டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு கோமாளிகள் மிகப் பெரிய காரணம் என்று சொன்னாலும் கோமாளிகளைக் கடந்து ஷோவில் முதலில் இருந்து கடைசி வரை இருப்பவர்கள் என்றால் அது பிரபல செஃப்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்.
கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் இப்படியொரு முடிவா? ரேஷ்மா பற்றி பரவும் தகவல்!
இவர்கள் நடுவர்களாக இருப்பது மட்டுமின்றி கோமாளிகளுடன் களத்தில் இறங்கி காமெடியில் பட்டையை கிளப்புவார்கள். இதனால், மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தை தேடிக் கொண்டனர். இப்படி இருக்கையில், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவி டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல விருதுகளை தட்டி சென்றதாக தெரிகிறது.
இந்த அதிர்ச்சியை எப்படி தாங்க போகிறார் சஹானா? கலங்கி நிற்கும் சிவா!
இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் நாளை விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஃபிக்ஷன் மற்றும் நான் ஃபிக்ஷன் சார்ப்பில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் குழுக்கள் கலந்துக் கொள்கின்றனர். இதில் கலந்துக் கொள்ளும் செஃப் தாமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அவரின் மனைவி. தனது மனைவிக்கு தாமு லவ் புரபோஸ் செய்வதும், அவர் எனக்கு ஒரே மனைவி என பெருமையாக கூறும் காட்சிகள் உள்ளன.
அதுமட்டுமில்லை, தாமுவின் மனைவி அவர்களின் திருமண கதை குறித்தும் பகிர்ந்து கொள்கிறார். அதில், அவரின் குடும்பம் ஆரம்பத்தில் தாமு ஒரு சமையல் காரர், வேண்டாம் வேற மாப்பிள்ளை பார்க்கலாம் என்றார்களாம். அதுமட்டுமில்லை தாமு அழகு வேற கம்மி என ரிஜக்ட் செய்தார்களாம். ஆனால் அவரின் மனைவி தான் பிடிவதாமாக நின்று அவரை திருமணம் செய்து இருக்கிறார். இதை தாமுவின் மனைவி பதிவு செய்ததும், மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைத்தட்டல்களை வாரி வீசுகின்றன,. இந்த க்யூட்டான புரமோ இணையத்தில் குறிப்பாக குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.