Home /News /entertainment /

என்னது இது குக் வித் கோமாளி பிரபலமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

என்னது இது குக் வித் கோமாளி பிரபலமா? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

இந்த குக் வித் கோமாளி பிரபலம் பல டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்

    விஜய் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் எல்லா நிகழ்ச்சிகளுமே மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளன. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு அடுத்து மிக அதிக சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோ ஒன்று உண்டு என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ஷோவை ப்ரொஃப்ஷனலாகவும் அதே சமயம் காமெடி கலந்து சுவாரசியமாகவும் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்த இருவர் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத்.

    இந்நிலையில் தமிழக சின்னத்திரை ரசிகர்களுக்கு மற்றும் மக்களுக்கு செஃப் என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் முதல் பெயர் செஃப் தாமு தான். இவர் ஏற்கனவே மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக இருந்த நிலையில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் இடையே இன்னும் பிரபலமாக்கியது விஜய் டிவி-யில் குக்கிங் + காமெடி ரியாலிட்டி ஷோவான "குக் வித் கோமாளி".

    இந்த ஷோவின் முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களுடன் குதூகலமாக விளையாடி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்கள் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத். இதில் நாட்டின் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவரான செஃப் தாமு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். செஃப் தாமுவின் முழுப்பெயர் தாமோதரன் என்பதாகும். Food Supply Department-ல் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ள செஃப் தாமு பல விருதுகள் மற்றும் 3 கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

    இதில் ஒரு தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் போட்டிக்கான கின்னஸ் உலக சாதனையும் ஒன்று. இது தவிர அவர் தனது துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பல டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

    (Hotel Management and Catering Technology) PhD பட்டம் பெற்ற முதல் இந்திய செஃப் ஆவார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Chef Damu (@chef_damu)






    ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்தில் சமீபத்தில் லண்டன் உலகத் தமிழ் அமைப்பு செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைபடுத்தியுள்ளது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் செஃப் தாமு, சமீபத்தில் இது யார் என்று யூகிக்கவும் என்று கேப்ஷனிட்டு பழைய பிளாக் அன்ட் ஒயிட் வின்டேஜ் ஃபோட்டோ ஒன்றை ஷேர் செய்து இருக்கிறார். அது வேறு யாருமல்ல செஃப் தாமு தான். பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தன்னுடைய இளம் வயது ஃபோட்டோவை தான் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார்.

    இதனை அவரது பல ஃபாலோயர்ஸ் சரியாக கண்டுபிடித்து நீங்கள் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் சார் நீங்களா இது, ஆளே அடையாளம் தெரியவில்லையே என்றும் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். மேலும் பல ஃபாலோயர்ஸ் இளம் வயதில் வின்டேஜ் லுக்கில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என செஃப் தாமுவுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி