விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில் முக்கியமான நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’யை குறிப்பிட்டு சொல்லலாம்.
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசன் இன்னும் சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள். இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில் போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். கடந்த 3 எபிசோட்களாக சீரியல் நடிகை ரித்திகா இடம்பெற்று, சமீபத்தில் எலிமினேட் ஆனார்.
Cook With Comali Pugazh: ‘இதான் வாழ்க்கை…’ மாட்டுக்கு அட்வைஸ் செய்த குக் வித் கோமாளி புகழ்!
இதில் சமையலுடன் சேர்த்து கோமாளிகள் செய்யும் ரகளையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, புகழ், பாலா, சிவாங்கி உள்ளிட்டோருக்கு என்றே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன. இந்நிலையில் வரும் வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி செலிபிரேஷன் ரவுண்டாக மாறவிருக்கிறது.
கொண்டாட்டம் என்றாலே நிச்சயம் சிறப்பு விருந்தினர்கள் இருக்க வேண்டும் தானே? அதன்படி இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரேகா, உமா ரியாஸ், வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்துள்ளனர்.
அந்தப் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் டிவி, ‘இந்த வாரம் குக் வித் கோமாளில செலிபிரேஷன் ரவுண்ட்’ எனத் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள நால்வரும் கடந்த சீசனில் போட்டியாளர்களாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாகவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்