ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

COOK WITH COMALI celebration: குக் வித் கோமாளி புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு இந்த வார எபிசோடில் சூப்பரான சர்ப்பிரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. என்னென்னு கெஸ் பண்ண முடியுதா?

விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டாப் லிஸ்டில் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. முதல் 2 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன் 3 தொடங்கப்பட்டது. இதில் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, வித்யுலேகா, ரோஷினி, தர்ஷன், அந்தோணி தாஸ், சந்தோஷ் பிரதாப் , ஸ்ருதிக்கா ஆகியோர் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் புகழ் மட்டும் அடிக்கடி மிஸ் ஆகிவிடுகிறார். ஆனால் அவரின் இடத்தை குரேஷி மற்றும் பாலா நிரப்பி வருகின்றனர். பல கட்டங்களுக்கு பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?

மற்ற 2 சீசன்களை விடவும் இந்த சீசன் சற்று அதிகமாகவே சர்ச்சையில் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த சீசனில் ஃபைனல்ஸூக்கு முன்பே சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் வந்து சென்றுள்ளனர். மிகப் பெரிய பீக்கில் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

திடீரென்று வந்த அழைப்பு.. ஓடி போன ரோபோ ஷங்கருக்கு கமல்ஹாசன் கொடுத்த முத்தம்!

இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது சீசன் 2 போட்டியாளர்கள் இந்த வாரம் என்ட்ரி கொடுக்கின்றனர். செலபிரேஷன் ரவுண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வார நிகழ்ச்சியில் ஷகிலா, கனி, பவித்ரா லட்சுமி, தீபா அக்கா,ரித்விகா ஆகியோர் என்ட்ரி கொடுக்கின்றனர். அதே போல் இந்த வாரம் புகழும் இருக்கிறார்.

' isDesktop="true" id="762276" youtubeid="vpNXVeN8nw0" category="television">

இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவில் கனி , ஷகிலாவை பார்த்ததும் கோமாளிகள் கட்டிப்பிடித்து அன்பை பொழிகின்றனர். புரமோவை பார்த்த ரசிகர்கள் இந்த வார எபிசோடுக்காக வெயிட்டிங்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Cook With Comali Season 2, TV Serial, Vijay tv