குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் சூப்பர் சிங்கர் பரத் செய்த காரியத்தால் ஒட்டு மொத்த குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்கள் ஏன் ஆங்கர் தர்ஷன் கூட பரத் மீது செம்ம கடுப்பில் இருக்கிறார். அப்படி என்ன செய்தார் பரத் வாங்க பார்க்கலாம்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன்-3 ஜனவரி மாதம் தொடங்கியது. விஜய் டிவி-யில் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் ரசிகர்களுக்கு செம்ம ஸ்பெஷலாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு
டி.ஆர்பியை மிரள வைக்கும் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் தான் என்றாலும் வாரம் முழுவது இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் இங்கு ஏராளம்.
இதையும் படிங்க.. சிவகாமி அம்மாவா இப்படி? சந்தியா சரவணனுக்கு அடுத்த பிரச்சனை ரெடி!
ஏற்கனவே ஒளிபரப்பான சீசன் மூலம் புகழ்,ஷிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டோர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தனர். முதல் சீசனை விட இரண்டாம் சீசன் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமானது. இப்போது 3 வது சீசனுக்கு அதை விட அதிக ரீச் கிடைத்துள்ளது. கடந்த சீசன்களில் இருந்த கோமாளிகளும் இந்த சீசனிலும் உள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் 10 குக்குகளும், 10 கோமாளிகளும் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த மூன்றாம் சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி,
சுருதிகா, மனோ பாலா, வித்யூ லேகா போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதே போன்று கோமாளிகளாக முன்னர் இருந்த புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி போன்றவர்களும் உள்ளனர். இதில் புதிதாக சூப்பர் சிங்கர் பரத்,குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன் ஆகியோரும் வந்துள்ளனர்.
இதையும் படிங்க.. epfo : உங்கள் குடும்பத்திற்கு ரூ. 7லட்சம் வரை கிடைக்கும்.. பிஎஃப் கணக்கில் இதை செய்தால் மட்டும் போதும்!
இதில் சூப்பர் சிங்கர் பரத் பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் எபிசோடிலே பரத்தை அடித்து சர்ச்சையில் சிக்கினார் செஃப் வெங்கடேஷ் பட். அதற்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கமும் அளித்து இருந்தார். அடுத்தடுத்த எபிசோடிகளில் பரத்தின் காமெடிகளை பார்த்து ரசிகர்கள் சில நெகடிவ் கமெண்டுகளை பதிவு செய்து இருந்தனர். ஆனால் அதற்கு ப்ரத் இயல்பாகவே இப்படி தான், அவர் காமெடி செய்யவில்லை அவரை வைத்து தான் மற்றவர்கள் காமெடி செய்கிறார்கள் என்றனர். இப்படி இருக்கையில் தொடர்ந்து பரத் நிகழ்ச்சியில் தனது பங்களிப்பை தந்து வருகிறார்.
இந்நிலையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான குக் வித் கோமாளி புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறப்பு விருந்தினர்களாக ஹே சினாமிகா பட குழுவினர் துல்கர், பிருந்தா மாஸ்டர், அதிதீ ராவோ வருகை தருகின்றனர். அதில் அதிதீக்காக பரத் தும் ஹி ஹோ பாடலை பாடுகிறார். அவரின் குரலில் மயங்கிய அதிதீ, உடனே பரத்தை கட்டிப்பிடித்து வாழ்த்துகிறார். அவ்வளவு தான் குக் வித் கோமாளி செட்டே அதிர்ச்சி ஆகுகிறது. அதிலும் அதிர்ச்சி அருண், பாலா, குரேஷி ஆகியோர் பொறாமையில் பொங்கி வெடிக்கின்றனர். செஃப் தாமு, பாலாவை வெறுப்பு ஏற்றுகிறார். மொத்த செட்டும் பரத்தை திட்டி தீர்க்கின்றனர். புரமோவை பார்த்த ரசிகர்கள் எபிசோடை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.