• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Cook With Comali: தனுஷுடன் பள்ளியில் படித்த அந்த ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர் யார் ?

Cook With Comali: தனுஷுடன் பள்ளியில் படித்த அந்த ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர் யார் ?

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷுடன் பள்ளியில் படித்த ஒருவர் தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, நடன இயக்குநர் பாபா பாஸ்கர் தான்!

  • Share this:
    நடிகர் தனுஷுடன் பள்ளியில் படித்த ஒருவர் தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, நடன இயக்குநர் பாபா பாஸ்கர் தான்!

    'குக்கு வித் கோமாளி' சீசன் இரண்டு நிகழ்ச்சி, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிக அதிக டி.ஆர்.பி மதிப்பீட்டை பதிவு செய்துள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைக் கூட மிஞ்சிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதில் இடம் பெற்றிருக்கும் குக்குகளும், கோமாளிகளும் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றிருக்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பு வெளியில் தெரியாமல் இருந்தவர்களும் இப்போது, படு பிரபலமாகியிருக்கிறார்கள்.

    'குக்கு வித் கோமாளி 2'வின் நட்சத்திரங்களில் ஒருவரான நடன நடன இயக்குனர் பாபா பாஸ்கர், அதிக நகைச்சுவை உணர்வோடு இருப்பவர். அதோடு டைட்டிலை வெல்ல வாய்ப்புள்ள ஒருவராகவும் திகழ்கிறார். இவர் நடிகர் தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் என்றாலும், இருவரும் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரே வகுப்பில் படித்ததாக பாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்களின் நட்பு பள்ளிக்கு வெளியேயும் தொடர்ந்ததாம். அதோடு தனுஷுடன் பல பாடல்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் பாஸ்கர்.

    இந்த சுவாரஸ்யமான விஷயம் தனுஷ் மற்றும் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: