• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Baba Baskar: குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷம்!

Baba Baskar: குக் வித் கோமாளி பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷம்!

பாபா பாஸ்கர்

பாபா பாஸ்கர்

நிகழ்ச்சியில் அதிக நகைச்சுவைகளை வழங்கியது மட்டுமல்லாமல், தனது சமையல் திறனையும் நிரூபித்தார்.

  • Share this:
    குக் வித் கோமாளி புகழ் பாபா பாஸ்கர் தனது மகளின் பூப்புனித நிராட்டு விழா வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    'குக் வித் கோமாளி' சீசன் இரண்டு தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிக அதிக டிஆர்பி-யை பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குக்குகளும், கோமாளிகளும் ரசிகர்களிடம் பெரும் புகழ் பெற்றனர். இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளங்கள் உருவாகின.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    'குக்க வித் கோமாளி 2' நட்சத்திரங்களில் ஒருவரான நடன இயக்குனர் பாபா பாஸ்கர், நிகழ்ச்சியில் அதிக நகைச்சுவைகளை வழங்கியது மட்டுமல்லாமல், தனது சமையல் திறனையும் நிரூபித்தார். இந்நிலையில் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா வீடியோவை பாபா பாஸ்கர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். லாக்டவுன் அமலில் இருப்பதால், இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.

    பாபா பாஸ்கரின் அடுத்த படம் அவரது நெருங்கிய நண்பர் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்'. இது ஜூன் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: