Home /News /entertainment /

cook with comali: கடைசி நேரத்தில் கஷ்டப்பட்ட ரக்‌ஷன்.. பாதியில் போனதுக்கு இதுதான் காரணம்!

cook with comali: கடைசி நேரத்தில் கஷ்டப்பட்ட ரக்‌ஷன்.. பாதியில் போனதுக்கு இதுதான் காரணம்!

குக் வித் கோமாளி ரக்‌ஷன்

குக் வித் கோமாளி ரக்‌ஷன்

நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனல்ஸில் ரக்‌ஷன் கலந்து கொள்ளவில்லை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குக் வித் கோமாளி 3 ஃபைனல்ஸில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு என்ன காரணம்? என்பதை விளக்கியுள்ளார் ஆங்கர் ரக்‌ஷன்.

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ரக்‌ஷனுக்கு சின்னத்திரையில்  தனி இடம் உண்டு.இவர் முதன்முதலில் தனது தொலைக்காட்சி பயணத்தை கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொடங்கினார். பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்த்து கொண்டவர் மக்களின் ஃபேவரெட் ஆங்கராக உருவெடுத்தார். விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், இது வரை நடந்த 3 சீசன்களுக்கும் ரக்‌ஷன் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கும் பலருக்கும் ரக்ஷனை அதிகம் பிடிக்கும்.

    பா.ரஞ்சித் தயாரிக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்...

    சின்னத்திரையில் மட்டுமில்லை வெள்ளித்திரையிலும்  ரக்‌ஷன் தனது பயணத்தை தொடங்கி விட்டார். துல்கருடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்தார். இதன் மூலம் வெள்ளித்திரையும் ரக்‌ஷனுக்கு ராசி ஆகிவிட்டது. இப்போது ஹீரோவாகவும் பாடகராகவும் களம் இறங்கியுள்ளார். பெண் ரசிகைகளை அதிகம் பெற்றுள்ள ரக்‌ஷன் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவ். தொடர்ந்து வித விதமான படங்களை வெளியிடுவார்.

    கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ’1947’ படத்தின் டீசர்!

    நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 ஃபைனல்ஸில் ரக்‌ஷன் கலந்து கொள்ளவில்லை. இது பெரிய குறையாகவே பார்க்கப்பட்டது. போட்டியாளர்கள், கோமாளிகள், ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் செய்தனர். ஆனால் ரக்‌ஷன் கலந்து கொள்ளாமல் போனதற்கு என்ன காரணம் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ரக்‌ஷன் அளித்த பேட்டி ஒன்றில் அதுப்பற்றி கூறி இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Rakshan Vj (@rakshan_vj)






    அதாவது ஃபைனல்ஸ் நடந்த சமயத்தில் ரக்‌ஷனுக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருந்ததாம். கொரோனாவா இருக்குமோ என பயந்தாராம்.  அதனால் தான் செட்டுக்கு வரவில்லையாம். அதே நேரம் நேரில் ஃபைனல்ஸை பார்க்க முடியவில்லை என வீட்டில் இருந்து மிகவும் வருத்தப்பட்டாராம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி