Home /News /entertainment /

குக் வித் கோமாளி அம்மு அபிராமிக்கு திருமணமா? அவரே சொன்ன பதில்!

குக் வித் கோமாளி அம்மு அபிராமிக்கு திருமணமா? அவரே சொன்ன பதில்!

அம்மு அபிராமி

அம்மு அபிராமி

இதற்கு முன்பு அம்மு , தீரன் அதிகாரம் ஒன்று,தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்,அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    குக் வித் கோமாளி 3 புகழ் அம்மு அபிராமி திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

    இல்லத்தரசிகள் மட்டுமே சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளை எப்போதும் பார்த்து கொண்டிருந்த போது, குடும்பமாக எல்லோரையும் ஒன்று சேர்த்து மக்களை கலகலப்பாக சமையல் நிகழ்ச்சியை பார்க்க வைத்தது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் பல தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு  2வது, 3வது சீசன்கள் தொடர்ந்தன.  இதில் மக்களுக்கு பிடித்த கோமாளிகள், போட்டியாளர்கள் இடம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக இருக்கும் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா ஆகியோருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இதில் புகழ் மட்டும் வெள்ளித்திரையில் பிஸியாகி விட்டதால் நேரம் கிடைக்கும் போது மட்டும் நிகழ்ச்சியில் தலையை காட்டி வருகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3ல் ஸ்ருதிக்கா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். தர்ஷன் இரண்டாவது இடத்தையும் அம்மு அபிராமி 3வது இடத்தையும் பிடித்தார். மூன்றாம் சீசனில் போட்டியாளர்களாக ரோஷினி, ஸ்ருதிக்கா, அம்மு அபிராமி, தர்ஷன், ராகுல் தாத்தா, அந்தோணி தாஸ், கிரேஸ், சந்தோஷ்,  மனோ பாலா, வித்யூ லேகா என மொத்தம் 10 போட்டியாளர்கள் களம் இறங்கினர். இதில் எல்லோரும் ரசிகர்கள் மனதில் ஸ்பெஷல் இடத்தை பிடித்து விட்டனர். அம்மு அபிராமிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதுவரை 6 படங்களில் அம்மு கமிட் ஆகியுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Ammu_Abhirami (@abhirami_official)






    இதற்கு முன்பு அம்மு,  தீரன் அதிகாரம் ஒன்று,தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்,அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மு அவ்வப்போது லைவில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அவர்களின் கேள்விக்கும் பதில் கூறுகிறார். இந்நிலையில் அம்மு அபிராமியிடம் ரசிகர்கள் தொடர்ந்து திருமணம் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள அம்மு அபிராமி “ எனக்கு 22 வயது தான் ஆகுது. இன்னும் திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அதைவிட கெரியரில் நான் ஜெயிக்க வேண்டியது, சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. கல்யாணத்திற்காக நேரம் வரும் போது கட்டாயம் செய்துக் கொள்வேன் “ என கூறியுள்ளார். அம்மு அபிராமி இந்த ஸ்மார்ட் பதிலை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Cook With Comali Season 2, Vijay tv

    அடுத்த செய்தி