முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடடே..! குக் வித் கோமாளி 4-ல் சர்ப்ரைஸாக களமிறங்கும் பிரபல நடிகர்?!

அடடே..! குக் வித் கோமாளி 4-ல் சர்ப்ரைஸாக களமிறங்கும் பிரபல நடிகர்?!

குக் வித் கோமாளி 4

குக் வித் கோமாளி 4

சர்ப்ரைஸாக இன்னொரு போட்டியாளர் அடுத்தவாரம் களமிறங்குவதாக தொகுப்பாளர் ரக்‌ஷன் தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குக் வித் கோமாளி சீசன் 4-ல் அடுத்த வாரம் பிரபல நடிகர் ஒருவர் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம். விஜய் டிவி-யில் ஒளிபரப்படும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கென தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அதிலும் ரியாலிட்டி ஷோக்களுக்கு பேர் போன தொலைக்காட்சி என்றும் கூறப்படுகிறது. அந்த வரிசையில் ரசிகர்களை பரவலாக மகிழ்வித்திருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை. தற்போது இதன் 4-வது சீசன் தொடங்கியுள்ளது.

முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை ஆகியோருடன் சில புதிய கோமாளிகளும் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதில் தொடக்க வார நிகழ்ச்சியில் ஜிபி முத்து மட்டும் கவனம் ஈர்த்தார். குக்குகளைப் பொறுத்தவரை, விசித்ரா, ஷெரின், காளையன், கிஷோர், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் ஐயப்பா, விஜே விஷால், ஆண்ட்ரியன் ஆகியோருடன் முந்தைய சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக்காக களமிறங்கியுள்ளார்.

இவர்களை தவிர சர்ப்ரைஸாக இன்னொரு போட்டியாளர் அடுத்தவாரம் களமிறங்குவதாக தொகுப்பாளர் ரக்‌ஷன் தெரிவித்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லையாம், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மைம் கோபி தான் குக் வித் கோமாளியில், குக்காக பங்கேற்க இருக்கிறாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv