சுமாரான ஒரு மேட்டரையே மிகவும் எமோஷனல் ஆன கன்டென்ட் ஆக மாற்றுவதற்கு பெயர்போன விஜய் டிவி சேனலுக்கு உண்மையிலேயே மிகவும் எமோஷனலான ஒரு மேட்டர் கிடைத்துள்ளது. அதை வைத்து, விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஒரு தரமான சம்பவமே அரங்கேற்றப்பட்டுள்ளது; அந்த சம்பவத்தின் நாயகன் வேற யாரும் இல்லை - கலக்க போவது யாரு, குக்கு வித் கோமாளி ஷோக்களின் வழியாக தனக்கெனெ ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்து வைத்திருக்கும் பாலா தான்!
பாலா, தமிழ்நாட்டின் காரைக்காலில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டில் விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்க போவது யாரு சீசன் 6ல் ஒரு போட்டியாளாராக கலந்து கொண்டு, டைட்டிலையும் வென்றார். இவர் ஜுங்கா, தும்பா, காக்டெய்ல், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
வெள்ளித்திரை வாய்ப்புகள் ஒருபக்கம் இருக்க, சின்னத்திரையிலும் பிஸியான காமெடியனாக வலம் வந்தார். சூப்பர் சிங்கர், 90ஸ் கிட்ஸ் vs 2கே கிட்ஸ், அது இது எது (சிரிச்சா போச்சு) என விஜய் டிவியின் அத்துனை ஃபேவரைட் நிகழ்ச்சிகளிலும் பாலா ஒரு பகுதியானார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பாலாவின் கேரியரில் ஒரு திருப்புமுனையானது. குக் வித் கோமாளி சீசன் 1ல் புகழ், சிவாங்கிக்கு அடுத்தபடியாக பாலா ஒரு முக்கிய கோமாளியாக தன்னை உருமாற்றிக்கொண்டார்.
பாலாவின் துல்லியமான டைமிங் மற்றும் அசாத்தியமான ரைமிங் டயலாக்குகளை கேட்பதற்காவே குக்கு வித் கோமாளி சீசனுக்கு ரசிகர்கள் பெருகினர் என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக, சக காமெடியன் ஆன புகழ் இல்லாமல், குக்கு வித் கோமாளி சீசன் 3 களை கட்டாது என்று அடிபட்ட பேச்சுக்களை, தனி ஆளாக துவம்சம் செய்து வருகிறார் பாலா!
இதையும் படிங்க.. சிவகாமி அம்மா நினைத்தது நடக்குமா? சந்தியா - சரவணனை பிரிக்க நினைக்கும் அர்ச்சனா!
இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் பாலாவிற்கு 'பெஸ்ட் காமெடியன்' விருது வழங்கப்பட்டது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோரிடம் இருந்து பாலா தனக்கான விருது பெற்றுக் கொண்டார்.
விருது வழங்கும் விழாவில் ரீல் லைஃப்பில் காமெடியான பாலா, ரியல் லைஃப்பில் செய்து வரும் சமூக சேவைகள் குறித்த தகவலும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்பட்டது. பாலா பல மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்து வருகிறார், உடன் முதியவர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். பாலாவின் இந்த சமூக சேவை குறித்த தகவலை அறிந்ததும், விஜய் டிவி பிரபலங்கள் பலரும் எழுந்து நின்று, கைதட்டி அவரை கௌரவப்படுத்தினர்!
அஜித்குமார் பிறந்த நாள் அன்று வலிமை... ஜீ தமிழின் சூப்பர் அப்டேட்!
விருதை பெற்றுக்கொண்டு, தான் செய்து வரும் சமூக சேவைகள் குறித்து பேசுகையில், "இதை விட பெரிய அவார்ட் என்னனா... 100 பேருக்கு கல்வி கொடுக்காம நான் உயிர கொடுக்க மாட்டேன்னு கடவுள்கிட்டயே சொல்றேன்!" என்று கூறி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார் பாலா!
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.